"கல்லூரி கனவுகள்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 13, 2022

"கல்லூரி கனவுகள்" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, மகளிர் திட்டம், முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து ‘’கல்லூரி கனவுகள்’’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்துகிறது. இதில் கலந்துகொள்வதற்கு மேல்நிலைப்பள்ளி எழுத்து, உயர்கல்விக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி பல்கலைக்கழகத்தில் அரசு நுழைவுத் தேர்வு, கலந்தாய்வு மூலம் சேர்க்கை அனுமதி பெற்று இருக்க வேண்டும். www.kalviseithiofficial.com தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் நடத்தும் பட்டப் படிப்புகள் மற்றும் யுஜி, பிஜி பட்டப்படிப்புகள், கல்லூரிகள் நடத்தும் பட்டப்படிப்பு, பட்ட மேல் படிப்புகள், விமானம், கல்வி துறையில் பட்டம், பட்டய படிப்புகள், அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் (ஆசிரியர் பயிற்சி பட்டயை படிப்பு நீங்களாக) தகுதிகளாகும். அடையாள அட்டை, முகவரி சான்று, கல்வி தகுதி சான்று, கல்லூரி சேர்க்கை அனுமதி கடிதம், கல்வி கட்டண விவரம், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, பான் கார்டு, இமெயில் முகவரி மற்றும் ஏற்கனவே பெற்றுள்ள கடன்கள் பற்றிய விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும். www.kalviseithiofficial.com சொத்து ஆவணங்களான மாணவரின் எதிர்கால வருமானம், பெற்றோர், பாதுகாவலர், கணவர், இணை விண்ணப்பதாரர்கள் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான கடன்களுக்கு பிணையம், ஜாமீன்தாரர் தேவையில்லை.

படிப்பு காலம் முடிந்து ஓராண்டு கழித்து கடன் தவணை திரும்ப செலுத்த ஆரம்பிக்க வேண்டும். 180 தவணைகளில் கடன் தவணையை திரும்ப செலுத்தலாம். கல்விக்கடன் பெறும் மாணவர்கள் ஒவ்வொருவரும் கல்வி கடன் அளவுக்கு ஏற்பவும், கல்வி காலம் மற்றும் திரும்ப செலுத்தும் காலம் முழுமைக்கும் ஆயுள் காப்பீடு பெற வேண்டும். பள்ளி கல்வித்துறை அலுவலர் தொலைபேசி எண் 8610046056 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.