பள்ளிகளில் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றத்திற்கான புதிய திட்டம்: ஆசிரியர்களுக்கு பயிற்சி அமர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 11, 2022

பள்ளிகளில் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றத்திற்கான புதிய திட்டம்: ஆசிரியர்களுக்கு பயிற்சி அமர்வு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றத்திற்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி உதவி கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் உள்பட 600 பேருக்கு பட்டறை மற்றும் பயிற்சி அமர்வுகள் நடைபெற உள்ளது.

சிஐடிஐஐஎஸ் திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான தலைமைத்துவ மேம்பாடு மற்றும் மாற்றத்துக்கான புதிய திட்டம் (எஸ்எல்டிடி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சி பள்ளிகள் முழுமையான மாற்றத்தை அடைவதற்கு தேவையான தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த அடுத்த 2 ஆண்டுகளுக்கு பட்டறைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் நடக்க இருக்கிறது.

எஸ்எல்டிடி திட்டம் மூலம் சென்னை மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 600 உதவி கல்வி அதிகாரிகள் (ஏஇஒ) தலைமையாசிரியர்கள் (எச்எம்), உதவித் தலைமையாசிரியர்கள் (ஏஎச்எம்) மற்றும் மூத்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், சுய-தனிப்பட்ட தலைமைத்துவத்தை வளர்ப்பது, கற்பித்தல், கற்றல், செயல்முறை கல்வி, தலைமைத்துவத்தை மாற்றுதல், உறவுமுறை தலைமை (உள் மற்றும் வெளி), நிர்வாகத் தலைமை மற்றும் நிறுவன தலைமை-(முன்னணி கண்டுபிடிப்புகள்) என்ற கருப்பொருட்களின் கீழ் பட்டறை மற்றும் பயிற்சி அமர்வுகள் நடக்க உள்ளன. ஒரு நபருக்கு கருப்பொருள் குறித்து 2 நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும். மாதத்திற்கு மொத்தம் 10 நாட்களில் 5 கருப்பொருள் குறித்து வகுப்பு எடுக்கப்படும். இதில் இவர்களுக்குள் 20 குழுக்களாக பிரித்து குழுவுக்கு 30 பேருக்கு வகுப்பு எடுக்கப்பட உள்ளது. www.kalviseithiofficial.com இந்த வகுப்பு 2 கட்டமாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் பயிற்சி வகுப்புகளும் 2ம் கட்டத்தில் செயல்முறை (practical) கற்பித்தலும் நடத்தப்பட உள்ளன. பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு கருப் பொருளுக்கும் ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் ஒதுக்கப்படும்.

அப்படி ஒட்டு மொத்தமாக 5 மாதங்கள் என ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் 10 நாட்கள் வகுப்பறை பயிற்சி வகுப்புகள் நடக்கும். செயல்முறை வகுப்பில் ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் மாதிரி பள்ளிகளுக்குச் சென்று, வெற்றிக்கான மற்றும் புகழத்தக்க செயல்களைப் பற்றி கேட்டறிந்து, அவர்களுடன் உரையாடி பயிற்சி பெற வேண்டும். அவ்வப்போது இந்த வகுப்பை மாநகராட்சி கல்வித்துறை ஆணையர் சினேகா, ஆணையர் ககன் தீப் சிங்பேடி ஆகியோர் ஆய்வு செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.