வருமான வரிக் கணக்கு: கடைசி நாளில் 68 லட்சம் பேர் தாக்கல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 31, 2022

வருமான வரிக் கணக்கு: கடைசி நாளில் 68 லட்சம் பேர் தாக்கல்

வருமான வரிக் கணக்கு: கடைசி நாளில் 68 லட்சம் பேர் தாக்கல்

புதுதில்லி, ஜூலை 31: தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணி வரையிலான நில வரப்படி, 68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து நிகழாண்டு வரிமான வரிக் கணக்கு தாக்கல் செய்த வர்களின் மொத்த எண்ணிக்கை 5.73 கோடியை எட்டியது. 2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தினம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந் தது. அந்த வகையில், ஜூலை 30 வரை 5.1 கோடி பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், கடைசி தினமான ஞாயிற்றுக் கிழமை இரவு 12 மணி வரையிலான நிலவரப்படி 68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்திருந்தனர் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

காலக்கெடுவை கடந்து தாக்கல் செய்யப்படும் நபர்களிடமிருந்து தாமத கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு ரூ.5 ஆயி ரம், ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.1,000 தா மத கட்டணம் வசூலிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.