போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த 3 திட்டத்தில் இவ்வளவு லாபமா! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 1, 2022

போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த 3 திட்டத்தில் இவ்வளவு லாபமா! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) ஜூன் மாதத்தில் ரெப்போ விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தியதிலிருந்து டெபாசிட்கள் மீதான வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளன, ஆனால் அவை இன்னும் பணவீக்க வரம்பிற்குக் கீழே உள்ளன.

ரெப்போ விகிதத்தின் அதிகரிப்புக்குப் பிறகு, குறுகிய கால வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன. இதனால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் ​​ வங்கிகளின் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை விட அஞ்சலக சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF) மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்கு போன்ற அஞ்சல் அலுவலக திட்டங்களின் வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளன. அதன்படி, தற்போதைய உயரும் வட்டி விகித காலத்தில், நிலையான வைப்புகளை விட அதிக பாதுகாப்பான வருமானத்தை ஈட்ட விரும்பும் தனிநபர்கள் நீண்ட கால முதலீடுகளுக்கு பின்வரும் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களை முயற்சிக்கலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS):

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Saving Scheme) என்பது 2004ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்காக அரசால் தொடங்கப்பட்ட சேமிப்புத் திட்டமாகும். 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், 55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்கள், 60 வயதுக்குட்பட்டவர்கள், மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோர் தபால் நிலையங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் திட்டத்திற்கான கணக்கை தொடங்கலாம்.

ஒரு மூத்த குடிமக்கள் தனியாகவோ அல்லது வாழ்க்கை துணையுடன் இணைந்து கூட்டாகவோ ஒரு கணக்கைத் தொடங்கலாம். மூத்த குடிமக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட முதலீட்டிற்கு பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளை வழங்கப்படுகிறது. மேலும் தற்போது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் காலாண்டு அடிப்படையில் ஆண்டுக்கு 7.4% வட்டியை வழங்குகிறது. இத்திட்டம் மொத்தம் 5 ஆண்டுகள் முதிர்வு காலத்தை கொண்டது, ஆனால் இடையில் ஏதாவது தேவை ஏற்பட்டால் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறலாம். ஆனால் அதற்காக அபாரதம் செலுத்த வேண்டியிருக்கும். பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF):

பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF) என்பது 15 வருட திட்டமாகும், இது 15 ஆண்டுகளுக்கு வழக்கமான பங்களிப்புகளை செலுத்த வேண்டும். ஒருவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு PPF இலிருந்து வெளியேறலாம் அல்லது 4ஆம் ஆண்டில் இருந்து முதலீட்டு தொகையில் இருந்து கடன் பெறலாம் மற்றும் 7ம் ஆண்டுக்குப் பிறகு முதலீட்டு தொகையில் இருந்து சிறிதளவு நிதியை திரும்ப பெறலாம்.

இந்த முதலீட்டில் ஒருவருக்கு ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க முடியும். வேண்டுமானால் மற்றொரு PPF கணக்கு மைனர் குழந்தையின் பெயரில் திறக்கலாம். குறைந்தபட்சம் ரூ 500 மற்றும் அதிகபட்சம் ரூ 1.5 லட்சம் (சுய மற்றும் சிறு கணக்கு) PPF இல் டெபாசிட் செய்யலாம். PPF இல் செய்யப்படும் முதலீடு, பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகையைப் பெறத் தகுதிபெறுகிறது மற்றும் பெறப்படும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY):

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்பது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க விரும்பு பெற்றோர்களுக்கான பிரத்யேக சேமிப்பு திட்டமாகும். சுகன்யா சம்ரித்தி யோஜனா 21 வருட கால அளவைக் கொண்டது. இதனை 10 வயதுள்ள பெண் குழந்தைகளின் பெயரில் மட்டுமே தொடங்க முடியும். 21 ஆண்டு கால அவகாசத்தில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு இடையில் ஏதேனும் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே திட்டத்தை முன்கூட்டியே முடித்துக்கொள்ள முடியும். மேலும், சிறுமிக்கு 18 வயது நிறைவடையும் போது, ​​சிறுமியின் உயர்கல்விக்காக, முந்தைய ஆண்டு கணக்கு இருப்பில் அதிகபட்சமாக 50 சதவீதத்தை திரும்பப் பெறலாம். மேலும், ஒரு பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு, அவளது திருமணத்தின் நோக்கத்திற்காக எப்போது வேண்டுமானாலும் கணக்கை நிறைவு செய்து பணத்தை பெறலாம். இந்த முதலீடு பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகையைப் பெறத் தகுதிபெறுகிறது மற்றும் பெறப்படும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.