CBSE 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய அப்டேட் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 27, 2022

CBSE 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய அப்டேட்

கொரோனா தொற்றுக்கு முன்பை விட, கூடுதலான மதப்பீட்டு மையங்கள் உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

CBSE 12th Exam Results:

பெரும்பாலான மாநிலங்களில் 12ம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு முடிவுகளை விரைவில் வெளியிட சிபிஎஸ்இ அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருந்தன.

தற்போது, விடைத்தாள் திருத்தும் பணியை சிபிஎஸ்இ தீவிரப்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றுக்கு முன்பை விட, கூடுதலான மதப்பீட்டு மையங்கள் உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், 50% பாடத்திட்டங்கள் மட்டுமே தற்போது மதிப்பீடு செய்யப்பட இருப்பதால், திட்டமிட்டதை விட முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகளை காட்டிலும், 12ம் வகுப்புக்கு தற்போது அதிக முக்கியத்துவும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது. மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு (Internal Assesment) அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு, இளங்கலை படிப்புகளுக்கு பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆகியவற்றில் 12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளப்படாது.

இருப்பினும், மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் பெரும்பாலான உயர்கல்வி துறைகளில் 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் போதுமானதாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.