கலைஞர் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்கள் இடையே பேச்சு போட்டி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 2, 2022

கலைஞர் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்கள் இடையே பேச்சு போட்டி

A speech contest is held between college students on the occasion of the artist’s birthday. In this regard, the Director of the Department of Tamil Development issued a statement yesterday: In his request for a grant for the year 2021-2022 for the Department of Tamil Development, he said, College and school students will be given speech prizes and prizes and certificates of appreciation. ” According to the announcement, a speech contest will be held today (3rd) on the eve of artist Karunanidhi's birthday for the year 2022-23. The first prize of Rs. 5000, second prize Rs.3000 and third prize Rs.2000. Accordingly, the competition will be held at Ambedkar Art College in Vyasarpadi in North Chennai, State College in Chepauk in South Chennai and Bharathi Women's Art College in Broadway in Central Chennai. Thus it is said. கலைஞர் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்கள் இடையே பேச்சு போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:


தமிழ் வளர்ச்சி துறைக்கான 2021-2022ம் ஆண்டு மானிய கோரிக்கையில் “நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும், சமூக சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாணவர்கள் இடையே பேச்சு போட்டி


அந்த அறிவிப்பின்படி 2022-23ம் ஆண்டிற்கு கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இன்று (3ம் தேதி) கல்லூரி மாணவர்களுக்கு இடையே பேச்சு போட்டி நடைபெற உள்ளது. பேச்சு போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படும்.


அதன்படி வடசென்னையில் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரி, தென்சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள மாநில கல்லூரி, மத்திய சென்னையில் பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் போட்டி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.