ஐ.ஐ.டி.,க்களில் B.Ed, படிப்பு: மத்திய அரசு முடிவால் பட்டதாரிகள் மகிழ்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 15, 2022

ஐ.ஐ.டி.,க்களில் B.Ed, படிப்பு: மத்திய அரசு முடிவால் பட்டதாரிகள் மகிழ்ச்சி

ஐ.ஐ.டி.,க்களில் B.Ed, படிப்பு:

தேசிய உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான ஐ.ஐ.டி.,க்களில், ஆசிரியர்களுக்கான பி.எட்., படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளதால், பட்டதாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 700 உட்பட, நாடு முழுதும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழக கல்லுாரிகளுக்கு, தமிழக ஆசிரியர் மற்றும் கல்வியியல் பல்கலைகளில் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பெரும்பாலான கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., படிப்புகளின் தரம் கேள்விக் குறியாகி உள்ளது. பி.எட்., கல்லுாரிகளும், பல்கலைகளும் தேசிய தர வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன. பல கல்வியியல் கல்லுாரிகளில் தகுதியான பேராசிரியர்கள், முதல்வர்கள் இல்லை.மேலும், மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்காமல் இருக்க சலுகையும் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.,க்களில், பி.எட்., படிப்பு நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சில ஐ.ஐ.டி.,க்களில் பி.எட்., சேர்க்கை நடத்தப்படும் என்றும், வரும் ஆண்டில் அனைத்து ஐ.ஐ.டி.,க் களிலும் பி.எட்., சேர்க்கை நடத்தப்படும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதனால், பட்டதாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போதைய கல்வியியல் கல்லுாரிகளில், பெயரளவில் பி.எட்., படிக்கும் நிலையில், ஐ.ஐ.டி.,யில் தரமான மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய படிப்பை மேற்கொள்ளலாம் என, மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐ.டி.ஐ.,களை தரம் உயர்த்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

மாநிலத்தில் உள்ள, 91 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் தற்போது, 71 நிலையங்களை, 'தொழில் 4.0' தரத்திலான, நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை - புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இடையே, நேற்று தலைமைச்செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின்முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் வழியாக, அரசு தொழில் பயிற்சி நிலையங்கள், புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள், மென்பொருட்கள் ஆகியவை, 2,877 கோடி செலவில் நிறுவப்பட்டு, தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளன.

இதன் வாயிலாக, நவீன திறன் பயிற்சிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள, முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் ஏற்படும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கணேசன், தலைமைச் செயலர் இறையன்பு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசீமுதீன், வேலை வாய்ப்பு மற்றும்பயிற்சித் துறை இயக்குனர் வீரராகவ ராவ், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைவர் ராமதுரை பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.