சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு பட்டப் படிப்பு நடத்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 11, 2022

சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு பட்டப் படிப்பு நடத்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

தொழில்நுட்ப மதிப்பீடு பட்டப் படிப்பு

சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு குறித்த பட்டப் படிப்புகளை நடத்த வேண்டும்' என, உயர்கல்வி நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., சார்பில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:நாடு முழுதும் சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்புகளையும், தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தும் வகையில், சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை

இந்த பணிகள் மிகவும் வெளிப்படையாக, சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் மேற்கொள்ளப்படும்.மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், சுகாதார திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில், இந்த கணக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிக்கான படிப்புக்கு, விரிவான பாட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், சுகாதார தொழில்நுட்ப மதிப்பீடு தொடர்பான முதுநிலை அறிவியல் பட்டப் படிப்புகளை நடத்த முன் வர வேண்டும். இதற்கான விபரங்களை, https://dhr.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.