அரசு பணிக்கு வயது வரம்பை 40 ஆக உயர்த்தக் கோரி முதல்வரிடம் எம்.எல்.ஏ.,க்கள் மனு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 10, 2022

அரசு பணிக்கு வயது வரம்பை 40 ஆக உயர்த்தக் கோரி முதல்வரிடம் எம்.எல்.ஏ.,க்கள் மனு

அரசு பணிக்கு வயது வரம்பு

அரசு பணிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்தக் கோரி முதல்வரிடம் எம்.எல்.ஏ.,க்கள் மனு அளித்தனர். புதுச்சேரி அரசு துறைகளில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

இந்நிலையில், தற்போது காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என முதல்வர் சட்டசபையில் அறிவித்தார். போலீஸ் துறையில், 390 பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப் பட்டது.

இந்நிலையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் நடந்தது. கூட்டத்திற்கு நாஜிம், எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தி.மு.க.,வைச் சேர்ந்த நாக. தியாகராஜன், பா.ஜ., கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், சுயேச்சைகள் நேரு, பிரகாஷ்குமார், சிவசங்கர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் அசோக்பாபு, ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வரிடம் எம்.எல்.ஏ.,க்கள் மனு

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசுகையில், 'அரசு துறைகளில் காலி பணியிடங்கள் பல ஆண்டு களாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால், பல கோப்புகள் தேக்கம் அடைந்து மக்கள் பணிகள் பாதிக்கப்படுகிறது. மேலும், இளைஞர்கள் வேலையின்றி தற்கொலை செய்து கொள்கின்றனர் இதனை தவிர்த்திட, அரசு வேலைக்கு விண்ணப்பிக்க நிர்ணயித்துள்ள 35 வயதை 40 ஆக உயர்த்தி, அரசு காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்' என வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர், கோரிக்கையை பரிசீலனை செய்வதாக கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.