தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 30, 2022

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

The school education department has announced that vocational lessons for 9th and 10th class students will be canceled in Tamil Nadu. During the AIADMK rule in Tamil Nadu in 2018, vocational education was introduced as an optional subject for 9th standard students. The Government of Tamil Nadu has announced to implement vocational education program for 9th standard students at a cost of Rs. 3.55 crore in 67 government high schools in 2018 with the funds of the Central Government.

Accordingly, 9th and 10th class students were given vocational training in sewing, cosmetology, fashion technology and agricultural engineering. In this situation, the school education department has announced that the vocational course for 9th class students will be canceled in Tamil Nadu. This means that in the current academic year, only 10th class students will have vocational lessons. 9th class students will have only 5 subjects already in practice.

தொழிற்கல்வி பாடம் ரத்து

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பப்பாடமாக தொழிற்கல்வி பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் நிதியில் கடந்த 2018ம் ஆண்டு 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ரூ.3.55 கோடியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணை வெளியிட்டது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

அதன்படி 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தையல் பயிற்சி , அழகுகளை, பேஷன் டெக்னாலஜி, வேளாண் பொறியியல் உள்ளிட்ட தொழிற்பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, 'நடப்பு கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும்.9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 பாடங்களே இருக்கும்,'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.