நீட் எழுதிய மாணவியிடம் ரூ 6 லட்சம் மோசடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 12, 2022

நீட் எழுதிய மாணவியிடம் ரூ 6 லட்சம் மோசடி

'நீட்' தேர்வு எழுதிய மாணவி

'நீட்' தேர்வு எழுதிய மாணவியிடம், மருத்துவ கல்லுாரியில் இடம் பெற்றுத் தருவதாக கூறி, 6 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

சேலம், கிருஷ்ணம்மாள் நகர், எம்.கே., அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த சரவணன் மகள் ரோஷ்னி, 19. இவர், நீட் நுழைவு தேர்வு எழுதி, முடிவுக்கு காத்திருந்தார்.அரசு மருத்துவ கல்லுாரியில் சேர தொடர்பு கொள்ளும்படி, ஏப்., 2ம் தேதி அவரது மொபைல் போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.

அந்த எண்ணில் ரோஷ்னி தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய நபர், 'டில்லியில் இருந்து ஹர்ஷவர்தன்' என, அறிமுகப்படுத்திக் கொண்டார்.அத்துடன், 'ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் அரசு மருத்துவ கல்லுாரிகளில் சீட் வாங்கி தர முடியும்' என, கூறியுள்ளார்.//// ரூ 6 லட்சம் மோசடி

இதை நம்பிய ரோஷ்னியிடம், ஆந்திராவின் அனந்தபூர் மருத்துவ கல்லுாரியில் இடம் பெற்றுத் தருவதாக கூறி, சேர்க்கை கட்டணத்தை செலுத்த, ஒரு வங்கி கணக்கை அந்த நபர் கொடுத்தார்.

அதில், 6 லட்சம் ரூபாயை ரோஷ்னி செலுத்தினார். அதன் பிறகு, அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச் ஆப்' என தகவல் வந்தது.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரோஷ்னி, சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.