பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம் - தேர்வுத்துறை அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 29, 2022

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது கட்டாயம் - தேர்வுத்துறை அறிவிப்பு.

தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அந்தவகையில் மறுபக்கம் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால், தேர்வு மையம் அமைக்கும் பணியில் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று தேர்வு அலுவலர்கள், ஆசிரியர்களுடன் தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா ஆலோசனை ஈடுபட்டார். அப்போது, தேர்வில் காப்பியடித்தல், ஆள்மாறாட்டம், கேள்விதாள் லீக் உள்ளிட்ட எந்தவித புகாருக்கும் இடம் தராமல் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தலை வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹால் டிக்கெட்

பொதுத் தேர்வில் எந்த மாணவருக்காவது ஹால் டிக்கெட் வழங்காமல் நிறுத்தி வைத்தால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனையடுத்து, பொதுத் தேர்வின் போது மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் எழுந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.