அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த அற்புதமான திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 23, 2022

அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த அற்புதமான திட்டம்

பெரம்பலுார் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்திட்ட அற்புதமான திட்டம் நான் முதல்வன் திட்டம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில்வதற்கான வழிகாட்டி அறிவுரைகள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான வழிகள் குறித்து தற்போது தொழில் முனைவோர்களாக உள்ளவர்கள். கல்வியாளர்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக வகுப்பு நடத்தப்படுகின்றது. அதனடிப்படையில், பெரம்பலுார் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட வகுப்பினை மாவட்டக் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த மாதம் துவக்கி வைக்கப்பட்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம். அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து வழிகாட்டும் வகையில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேல் நிலைக்கல்வி படிக்கும் போதே அடுத்து உயர்கல்விக்கு என்னென்ன படிக்கலாம், என்ன படிப்பு படித்தால் என்ன வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தெளிவை நீங்கள் பெறுவதற்கு இந்த திட்டம் பெரிதும் பயனுள்ளதாத இருக்கும். பள்ளிப்பருவத்தில் கிடைத்த அற்புதமான திட்டம் நான் முதல்வன் திட்டம். பெரம்பலுார் மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி முதல் நேற்று வரை இந்த சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள 45 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 4,053 மாணவ மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், பள்ளி தலைமையாசிரியர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.