அரசுப் பள்ளியில் நாளிதழ் வாசிப்பு திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 6, 2022

அரசுப் பள்ளியில் நாளிதழ் வாசிப்பு திட்டம்

Narasimhanayakanpalayam Government High School campus, students are encouraged to read the newspaper by setting aside a separate place to read the newspaper. In government schools, various measures are being taken to develop the general knowledge of the students.

Narasimhanayakkanpalayam Government High School campus, a separate place has been allocated for this. Here, students sat and read magazines with interest.

In this regard, the headmaster of the school Ramachandran said, "Students can gain general knowledge by reading newspapers and succeed in various competitive examinations conducted by the government. Is on the rise. " நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், நாளிதழ் வாசிக்க தனி இடம் ஒதுக்கி, மாணவர்கள் பத்திரிகை படிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.அரசுப் பள்ளிகளில், மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, பள்ளி வளாகத்தில் நாளிதழ்களை படிக்கும் பகுதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், இதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு, மாணவர்கள் அமர்ந்து ஆர்வத்துடன் பத்திரிகைகளை, வாசித்தனர்.

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் கூறுகையில், "மாணவர்கள் நாளிதழ்களை வாசிப்பதால், பொது அறிவு பெற்று, அரசு நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். மேலும், அன்றாட நிகழ்வுகள் குறித்து தெளிவாக அறிந்து கொள்வதால், விழிப்புணர்வுடன் இருக்கலாம்.முதலில் குறைவான மாணவர்களே பத்திரிகைகளை படித்து வந்தனர். தற்போது, மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.