அரசுப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து - அமைச்சர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 28, 2022

அரசுப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து - அமைச்சர் அறிவிப்பு

தனியார் மினி பேருந்து பிரச்சனைக்கு பேரவை தொடருக்கு பின் உரிமையாளர்களை அழைத்து பேசி தீர்வு காணப்படும் என சிவசங்கர் தெரிவித்திருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தனியார் மினி பேருந்து சேவை தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழகம் தனியார் மினி பேருந்து வழித்தடத்தை மேலும் 4 கி.மீ. நீட்டிக்க வேண்டும் எனவும் .பிச்சாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். பின்பு பேசிய அமைச்சர் சிவசங்கர்; தனியார் மினி பேருந்து பிரச்சனைக்கு பேரவை தொடருக்கு பின் உரிமையாளர்களை அழைத்து பேசி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளார். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித் தடங்களை ஆராய்ந்து, மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலினை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முன்பு நடைபெற்ற தமிழக பேரவை கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது நேரத்தின் போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் விடுத்த கோரிக்கைக்கு அமைச்சர் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.