தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தினை வழங்கிட ஆவன செய்ய வேண்டுதல் - சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 22, 2022

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தினை வழங்கிட ஆவன செய்ய வேண்டுதல் - சார்பு

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தினை வழங்கிட ஆவன செய்ய வேண்டுதல் - சார்பு

2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற்றுள்ள தங்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியம் கடந்த ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் உள்ளது. ஏழை, எளிய பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இப்பணியாளர்கள் ஊதியம் வழங்கப்படாததால் தொடர்ந்து பள்ளிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதனால் ஆசிரியர்களே பள்ளிகளில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பள்ளிகளில் நடைபெற்று வந்த தூய்மைப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தங்களது குழந்தைகளின் சுகாதாரம் குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

எனவே, பள்ளிகளில் தொய்வின்றி தூய்மைப் பணி நடைபெற்று மாணவ, மாணவிகளின் சுகாதாரம் பாதுகாக்கப்பட தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியத்தினை நிலுவைத் தொகையுடன் வழங்கிட ஆவன செய்ய பெரிதும் வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.