நாளை ( 05.03.2022 ) NMMS தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 4, 2022

நாளை ( 05.03.2022 ) NMMS தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு!

நாளை ( 05.03.2022 ) NMMS தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு!
 
NMMS தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம் 

நாளை (05.03.2022) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அன்பான வாழ்த்துகள் 
NMMS - முக்கிய குறிப்புகள்

காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு 9 மணிக்கே இருக்க வேண்டும்.

 Part - 1 MAT = 9.30 -11.00

11.00 -11.30 break

Part -2 SAT= 11.30-1.00

OMR sheet விடைகளை நிழலிட கருப்பு நிற பந்துமுனை பேனா மற்றும் வினாத்தாளில் விடைக்குறிப்பு எழுதிப்பார்க்க பென்சில் எடுத்துக்கொள்ளவும். 

அனைத்து வினாக்களுக்கும் கட்டாயம் விடையளிக்க வேண்டும். நேர மேலாண்மை மிக முக்கியம். 

வினாக்களை வரிசைப்படியும், எளிமையான வினாக்களுக்கு முதலில் விரைவாக விடையளிக்கவும். 

கடின வினாக்களுக்கு, நான்கு மாற்று விடைகளில் இரண்டு option சரியான விடைக்கு அருகே இருக்கும். அந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

Non verbal reasoning (படங்கள்) சார்ந்த கணக்குகளை தவறு செய்யாமல் மிக கவனமாக விடையளிக்கவும். 

வழிமுறை கணக்குகளை கவனமாக கையாள வேண்டும்.

SAT கணக்கு பாடத்திற்கு விடையளிக்க வினாத்தாளில் அந்தந்த வினாவிற்கு அருகிலேயே குறிப்புகளை எழுதி பார்க்கவும்.

முக்கிய தலைப்புகள்

 MAT - எண் தொடர் வரிசை, எண், எழுத்து குறியிடல், வென் படங்கள், செருகப்பட்ட படங்கள், இருக்கை அமைப்பு கணக்குகள், ஒப்புமை எண்கள்/எழுத்துகள்/படங்கள், தவறான வார்த்தை, ஆங்கில அகர வரிசைப்படி வரிசைப்படுத்துதல், Non  verbal reasoning 7 தலைப்புகள்.

தேர்வில் வெற்றி பெற அனைத்து மாணவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.