புதிய கல்வி கொள்கை தேர்வுக்கு தனி சான்றிதழ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 4, 2022

புதிய கல்வி கொள்கை தேர்வுக்கு தனி சான்றிதழ்

புதிய கல்வி கொள்கை தேர்வுக்கு தனி சான்றிதழ்

சென்னை : புதிய கல்வி கொள்கைப்படி நடத்தப்படும் தேர்வுகளுக்கு, தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.

மாநில பாடத் திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | மாணவர்கள் வெளிநாடு செல்ல யார் காரணம்?

தேர்வு அட்டவணையில், பிளஸ் 2 தொழில் கல்வி பாடப் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற பிரிவு மாணவர்களுக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் தனியாக, ஒரு தொழிற்கல்வி பாடத் தேர்வு நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அடிப்படையில், இத்தேர்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தக் கூடாது என்ற, அரசின் நிலைப்பாடு உள்ளதால், கூடுதலாக நடத்தப்படும் தொழிற்கல்வி பாடத்துக்கான மதிப்பெண்ணை, பொது தேர்வு மதிப்பெண் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.

பொது தேர்வு சான்றிதழில், வழக்கமான முக்கிய பாடங்களின் மதிப்பெண் மட்டுமே இடம் பெற வேண்டும் என்றும், தொழிற்கல்வி பாடங்களின் மதிப்பெண்களை தனியே குறிப்பிட்டு, சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்வி துறைக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.