முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் பொழுது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை ஏற்கனவே பெற்ற பள்ளியில் ஒப்படைக்க வேண்டுமா? அல்லது புதிதாக பணியேற்கவுள்ள பள்ளிக்கும் அதை எடுத்துச் சென்று மாணவர்களுக்கான கற்பித்தல் பணியை தொடரலாமா? CM Cell Reply - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 21, 2022

முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் பொழுது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை ஏற்கனவே பெற்ற பள்ளியில் ஒப்படைக்க வேண்டுமா? அல்லது புதிதாக பணியேற்கவுள்ள பள்ளிக்கும் அதை எடுத்துச் சென்று மாணவர்களுக்கான கற்பித்தல் பணியை தொடரலாமா? CM Cell Reply

முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் பொழுது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை பழுதின்றி நன்முறையில் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் - முதலமைச்சர் தனிப்பிரிவு தகவல்
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்! மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஏராளமான நலத்திட்டங்கள் செய்து வருவதன் ஒரு பகுதியாக தற்போது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு புதிய பாடங்களை மாணவர்களுக்கு எளிதாக கற்பிக்கும் பொருட்டு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுகலை ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் பொழுது அந்த மடிக்கணினியை ஏற்கனவே பெற்ற பள்ளியில் ஒப்படைக்க வேண்டுமா? அல்லது புதிதாக பணியேற்கவுள்ள பள்ளிக்கும் அதை எடுத்துச் சென்று மாணவர்களுக்கான கற்பித்தல் பணியை தொடரலாமா? என்பது குறித்த தகவல் வழங்குமாறு பணிந்து கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி ஐயா.

நிராகரிக்கப்படுகிறது. அரசாணை 273 நாள் 28.12.2018 ல் இது தொடர்பாக விளக்கம் வழங்கப்பட்டுள்ளது எனினும் மனுதாரர் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மடிக்கணிணிகள் மாணவர்களின் நலன் கருதியே வழங்கப்படுகிறது. பள்ளி வேலை நேரங்களில் மடிக்கணிணிகளை மாணவர்கள் பயன்படுத்துவதற்கு வழிகாட்ட மட்டுமே ஆசிரியர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படுகிறது ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிணிகள் பள்ளியில் உள்ள இருப்பு பதிவேட்டில் வைத்து பராமரிக்கப்பட ண்டும் ஆசிரியர்க வேறு பள்ளிக்கு மாறுதல் ஆகி செல்லும்போது பள்ளியில் பழுதின்றி நன் முறையில் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் பழுது ஏற்பட்டால் அதை பயன்படுத்தும் ஆசிரியரே முழுபொறுப்பு. ப.க.இ.ஓ.மு.எண் 55729/வி2/இ2/2019 நாள் 31.10.19

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.