நீட் தேர்வு விவகாரம் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 06-02-2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 6, 2022

நீட் தேர்வு விவகாரம் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 06-02-2022

நீட் தேர்விற்கு மூல காரணமாக திமுக இருந்ததை மறைத்து, அதிமுக மீது வீண் பழி சுமத்தப்படுகிறது.

- அமைச்சர் துரைமுருகனின் அறிக்கைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கண்டனம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை - 06-02-2022

நீட் தேர்விற்கு மூலக் காரணமாக தி.மு.க. இருந்ததை மூடி மறைக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது வீண் பழி சுமத்தும் தி.மு.க.விற்கு கண்டனம்

நீட் தேர்வு குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், என் மீதும் குற்றம்சாட்டி மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்தால் "எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கி விடுவார்கள்" என்ற கோயபெல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ என்ற எண்ணம் தான் மக்கள் மத்தியில் தோன்றுகிறது. தி.மு.க.வின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய கடமை முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.

அனைத்திந்திய அண்ணா திராவிட இந்திய மருத்துவக் குழுவால் வெளியிடப்பட்ட 21-12-2010 நாளைய அறிவிக்கை எண். MCI-31(1)/2010-Med/49068, 27-12-2010 அன்று மத்திய தவறினால் ஏற்பட்ட காயத்திற்கு ஓரளவு மருந்து கொடுத்து குணப்படுத்திய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு ரத்து என்பதற்கு தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும், கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

மத்திய அரசுக்கு கைகட்டி நின்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி நடத்தியதாக திரு. துரைமுருகன் அவர்கள் கூறி இருக்கிறார். யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இல்லை. அதே சமயத்தில் தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் ஒத்துழைப்பு கொடுக்கத் தயங்கமாட்டோம். 'காரியம் பெரிதா, வீரியம் பெரிதா' என்று கேட்டால் எங்களைப் பொறுத்தவரை காரியம்தான் பெரிது. அதனால்தான் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என பல நல்ல திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்தன என்பதை திரு. துரைமுருகன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டபோது, தி.மு.க. என்ன செய்து கொண்டிருந்தது? அதற்குக் பெயர் என்ன? என்பதை திரு. துரைமுருகன் அவர்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

செய்த தவற்றை ஒத்துக்கொண்டு அதற்கு பரிகாரம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், நல்லத் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு அளித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை குறை சொல்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது. 'கருமமே கண்ணாயினார்' என்பதன் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்ய முனைப்புடன் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.