பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2026 | School Morning Prayer Activities - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 9, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2026 | School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.08.2026 (School Morning Assembly Content)

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 10.08.2026 (திங்கட்கிழமை) நாளுக்கான பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்தின் (School Morning Prayer Assembly) அனைத்துப் பகுதிகளும் இங்குத் தெளிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.


1. சிறப்புத் தலைப்பு: வைணு பாப்பு வானாய்வகம்

இன்றைய காலை வழிபாட்டு கூட்டத்தின் முக்கியக் கருப்பொருள் மற்றும் சிறப்புப் பகுதி: காவல‌ர் வைணு பாப்பு வானாய்வகம்.

2. திருக்குறள் (Thirukkural with Meaning)

  • பால்: பொருட்பால்
  • இயல்: அரசியல்
  • அதிகாரம்: 47 - தெரிந்து செயல் வகை
  • குறள் எண்: 468
குறள்:
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

பொருள்:
ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

3. பழமொழி & பொருள் (Proverb)

English Proverb: Like priest : like people.
தமிழாக்கம்: அன்பர் எப்படியோ, தொண்டரும் அப்படியே.

4. இரண்டொழுக்க பண்புகள் (Two Good Habits)

  1. இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி மட்டுமே அதைச் செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது, அன்பால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
  2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாகத் தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தைக் கேட்டு நடப்பேன்.

5. பொன்மொழி & சிந்தனை (Quotes & Thought for the Day)

பொன்மொழி:
"உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி." - நெல்சன் மண்டேலா

Thought for the Day:
Hard work today brings success tomorrow. (இன்றைய உழைப்பே நாளைய வெற்றி)

6. பொது அறிவு (General Knowledge)

  1. மனித உடலில் உள்ள இரத்தத்தின் pH மதிப்பு என்ன?
    விடை: 7.35 - 7.45
  2. தூய மழை நீரின் pH மதிப்பு என்ன?
    விடை: 5.6

7. ஆங்கிலச் சொற்கள் (English Vocabulary)

  • Ambitious: Has strong goals (இலட்சியமுள்ளவர்)
  • Adaptable: Adjusts to change (மாற்றங்களுக்கு ஏற்ப மாறுபவர்)

8. புவியியலும் சுற்றுக்சூழலும் (Geography & Environment)

இந்திய துணைக்கண்டத்தின் முக்கியத்துவம்:

  • வளமான விவசாய நிலங்கள்.
  • பல்வேறு காலநிலைகள் மற்றும் இயற்கை வளங்கள்.
  • உலகின் பழமையான நாகரிகங்கள் வளர்ந்த பகுதி.
  • பல மொழிகள், பண்பாடுகள் மற்றும் மதங்கள் இணைந்து வாழும் நிலம்.

9. NMMS - MAT வினா விடை (Mental Ability Test)

வினா:
ஆப்பிள் "தக்காளி" எனவும், தக்காளி "சோப்" எனவும், சோப் "தேன்" எனவும், தேன் "மை" எனவும் அழைக்கப்பட்டால் பின்வருவனவற்றுள் குளிப்பதற்குப் பயன்படுத்துவது எது?

(1) தேன்
(2) தக்காளி
(3) சோப்பு
(4) மை

விடை: (1) தேன் (ஏனெனில் சோப்பு என்பது 'தேன்' என அழைக்கப்படுகிறது)

10. வரலாற்றுத் துளிகள் - ஆகஸ்ட் 10 சிறப்பு (History Today)

மணாலி கல்லாட் வைணு பாப்பு பிறந்த தினம் (ஆகஸ்ட் 10, 1927 - ஆகஸ்ட் 19, 1982):
இவர் நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த அனுபவம் வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார். தமிழ்நாட்டின் காவலூரில் அமைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற "வைணு பாப்பு வானாய்வகத்தை" நிறுவுவதற்கு முக்கியக் காரணமானவர்.

11. நீதிக்கதை (Moral Story)

தலைப்பு: விட்டுக்கொடுப்பதே வெற்றியின் வழி

ஒரு சிறிய குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன் அருண், மகள் காவ்யா ஆகியோர் வசித்து வந்தனர்.

ஒரு நாள் மாலை, அப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது, குழந்தைகள் இருவருக்கும் பிடித்தமான ஒரு பெரிய கேக் வாங்கி வந்தார். "இதை இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு அப்பா வெளியே சென்றார்.

அருணுக்கும் காவ்யாவுக்கும் கேக்கின் பெரிய துண்டு வேண்டும் என்று ஆசை. இருவரும் ஒரே துண்டை எடுத்துக்கொள்ள முயன்றதால், சிறிய சண்டை ஏற்பட்டது. அதைப் பார்த்த அம்மா, "நீங்கள் இருவரும் விட்டுக்கொடுத்தால் இந்தப் பிரச்சினை உடனே தீர்ந்துவிடும்" என்றார். ஆனால் இருவரும் கேட்கவில்லை.

சிறிது நேரம் கழித்து, காவ்யா யோசித்தாள். "நான் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் என்ன? என் தம்பியும் சந்தோஷமாக இருப்பானே!" என்று நினைத்து, பெரிய துண்டை அருணிடம் கொடுத்தாள். அதைப் பார்த்த அருணுக்கு மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.

"நீ எனக்காக விட்டுக்கொடுத்தாய். எனக்கும் உனக்காக விட்டுக்கொடுக்கத் தெரியும்" என்று கூறி, அந்தப் பெரிய துண்டை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை காவ்யாவிடம் கொடுத்தான். இருவரும் சேர்ந்து கேக்கை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

அதைப் பார்த்த அம்மா சிரித்துக்கொண்டே, "விட்டுக்கொடுப்பதால் நாம் எதையும் இழப்பதில்லை. மாறாக, அன்பையும் மகிழ்ச்சியையும் பெறுகிறோம்" என்றார். அன்று முதல் அருணும் காவ்யாவும் சிறிய விஷயங்களுக்காக சண்டையிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழத் தொடங்கினர். அவர்களின் வீடு எப்போதும் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக மாறியது.

நீதி: விட்டுக்கொடுப்பது தோல்வி அல்ல; அது உறவுகளை வலுப்படுத்தும் வெற்றியின் அடையாளம்.

12. இன்றைய முக்கியச் செய்திகள் - 10.08.2026 (Today's News Headlines)

தமிழ் செய்திகள்:

  • கபினி அணையில் நீர்மட்டம் உயர்வு காரணமாக தமிழகத்திற்கு காவிரி நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.
  • மக்களுக்கு சேவை செய்வதில் முதலிடம் பிடித்த புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருதை மத்திய மந்திரி அமித்ஷா வழங்கினார்.
  • இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.

விளையாட்டுச் செய்திகள்:

  • கொரிய பேட்மிண்டன் இறுதிப் போட்டி: இந்திய வீராங்கனை சாலிஹா சாம்பியன் பட்டம் வென்றார்.
  • உலக ஜூனியர் தடகளம்: இந்திய வீரர் ஆஷிஷ் யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

English Headlines:

  • Due to the rise in water level at the Kabini Dam, the release of Cauvery water to Tamil Nadu has been increased to 12,000 cubic feet per second (cusecs).
  • Union Minister Amit Shah presented the President’s Colours Award to the Puducherry Police for their excellent service to the people.
  • The US Senate passed a bill to impose a 100% tax on India.

Sports News:

  • Korea Badminton Final: Indian player Saleha won the championship title.
  • World Junior Athletics: Indian athlete Ashish Yadav won the silver medal.

தொகுப்பு: Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.