TAPS - மாதாந்திர இடைக்காலத் தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் கருவூலக் கணக்கு இயக்ககம் வெளியீடு!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 1, 2026

TAPS - மாதாந்திர இடைக்காலத் தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் கருவூலக் கணக்கு இயக்ககம் வெளியீடு!!!



TAPS - மாதாந்திர இடைக்காலத் தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் கருவூலக் கணக்கு இயக்ககம் வெளியீடு!!! TAPS – Directorate of Treasuries and Accounts issues instructions to disbursing officers regarding the payment of the monthly interim amount (Interim Payout)!!!

பொருள்:ஓய்வூதியம் - தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) - (Interim payout) மாதாந்திர இடைக்கால தொகை – வழங்குதல் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்குதல் - தொடர்பாக.

பார்வை: 1. அரசாணை (நிலை) எண்.7, நிதி (பிசிஜி) துறை, நாள்:09.01.2026

2. அரசாணை (நிலை) எண்.111, நிதி (TAPS) துறை, நாள்:16.06.2026

பார்வை 1ல் காணும் அரசாணையின்படி 01.04.2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணியில் சேர்ந்து 01.01.2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணிஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு நிலையான ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TA PS) 660H புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான விதிகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகள்தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை 2ல் காணும் அரசாணையின்படி தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகளை உருவாக்கும் பணிகளை அரசு தொடங்கி உள்ளதால். 01.01.2026

அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணிஓய்வு / இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து 01.01.2026 அன்றோ அல்லது அதற்கு அல்லது அதற்கு பின்னரோ ஓய்வுபெற்ற / இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (C P S ) அல்லது தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்(TAPS)ல் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 01.01.2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணிஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்படி இறுதி தொகை பெற விருப்பம் தெரிவித்தால், படிவம் - னை முழுமையாக பூர்த்தி செய்து உரிய அலுவலகத்தில் சமர்ப்பித்தால் அரசாணை எண்.59நிதிதுறை (PGC) நாள் 22.02.2016 ன் படி கருத்துரு கருவூல கணக்குத்துறையின் ஓய்வூதிய பிரிவிற்கு அனுப்பப்பட்டு இறுதி ஒப்பளிப்பு ஆணை வழங்கப்படும்.

அவ்வாறே. இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்படி இறுதிதொகை பெற விருப்பம் தெரிவித்தால், படிவம் – IV -

ர்த்தி செய்து உரிய அலுவலகத்தில் சமர்ப்பித்த நாள் 22.02.2016 படி ஓய்வூதிய பிரிவிற்கு அனுப்பப்பட்டு இறுதி வழங்கப்படும்.

பார்வை 2ல் காணும் அரசாணையின்படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இறுதி தொகை பெற விருப்பம் தெரிவித்து இறுதி தொகை பெறப்பட்ட பின்பு மீண்டும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் (TAPS) கீழ் விருப்பம் கோர இயலாது.

01.01.2026 அன்றோ அதற்கு பின்னரோ பணிஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் (TAPS) கீழ் இடைக்கால மாதாந்திர தொகை (Interim payout) பெற விரும்பினால், படிவம் - னை பூர்த்தி செய்து உரிய அலுவலகத்தில் வழங்கினால், அதற்குரிய ஆணை சம்பந்தப்பட்ட துறை மூலமாக வழங்கப்பட்டு, இடைக்கால நிவாரணத் தொகை (Interim payout) மாதந்தோறும் கருவூலம் வாயிலாக வழங்கப்படும்.

அவ்வாறே. இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாரிசுதாரர்கள், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் (TAPS) கீழ் இடைக்கால மாதாந்திர ஓய்வூதியம் பெற விரும்பினால், படிவம் - || - னை பூர்த்தி செய்து உரிய அலுவலகத்தில் வழங்கினால், அதற்குரிய ஆணை சம்மந்தப்பட்ட துறை மூலமாக வழங்கப்பட்டு இடைக்கால தொகை (Interim payout) மாதந்தோறும் கருவூலம் வாயிலாக வழங்கப்படும்.

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் (TAPS) கீழ் இடைக்கால மாதாந்திர ஓய்வூதியம் (Interim payout) பெறுபவர்கள் இத்திட்டத்தின் இறுதி செயல்பாட்டு நடைமுறைகள் வகுக்கப்பட்டு செயல் வடிவம் பெறும்போது தங்களுடைய விருப்பத்தை மாற்றம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) தொடர்பாக அரசின் வழிகாட்டுதல் மேற்தெரிவித்த அரசாணையின்படி, தொடர் நடவடிக்கைகள் கருவூலத்தின் வாயிலாக மேற்கொள்ள இருப்பதால், இப்பொருள் குறித்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள் / மாவட்ட கருவூல் அலுவலர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு (D D O ) உரிய முறையில் திட்டத்தின் செயற்கூறுகளை எடுத்துரைத்து, 01.01.2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணிஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் / இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு உரிய அறிவுறுத்தி முறையில் அனைத்து விவரங்களும் உரிய இணைப்புகளுடன் விண்ணப்பிக்க ஆவண செய்யுமாறு சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள்/ கருவூல் அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும் மண்டல இணை இயக்குநர்கள் இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கருவூல அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும் நேரடியாக செயல்பாட்டினை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்படுகின்றனர்.

// ஆணைப்படி அனுப்பலாகிறது//

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.