காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்களுக்கு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி வழங்கலாம் என்பதற்கான நிதித்துறை தெளிவுரை கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 11, 2026

காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்களுக்கு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி வழங்கலாம் என்பதற்கான நிதித்துறை தெளிவுரை கடிதம்



காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்களுக்கு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி வழங்கலாம் என்பதற்கான நிதித்துறை தெளிவுரை கடிதம் Clarification letter from the Finance Department stating that differently-abled government employees may be granted conveyance allowance for the holidays associated with quarterly, half-yearly, and annual examinations.

ஐயா.

பொருள்:

படிகள் -அரசாணை (நிலை) எண்.667, நிதி (ஊதியப் பிரிவு)த் துறை, நாள் 27.06.1989-ன் படி பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி வழங்குவது குறித்து தெளிவுரைகள் -தொடர்பாக

பார்வை:

1. அரசாணை (நிலை) எண்.667, நிதி (ஊதியப் பிரிவு)த் துறை, . 27.06.1989.

2. பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர்கள் சங்கம். கடித நாள் 16.12.2020.

பார்வையில் காணும் அரசாணை மற்றும் கடிதத்தின் மீது தங்களது கவனத்தை ஈர்க்கிறேன்.

2. அரசாணை (நிலை) στσάστ.667, நிதி (ஊதியப் பிரிவு)த் துறை. நாள். 27.06.1989-இன்படி பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊர்திப்படியில் தற்செயல் விடுப்பு தவிர தன்னிச்சையாக எடுக்கப்படுகின்ற விடுப்புகள் மற்றும் ஏனைய நீண்ட நாள் விடுப்புகளுக்கு (Joining time. Suspension) மட்டுமே பிடித்தம் செய்யப்பட வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு மற்றும் ஏனைய அரசு விடுமுறை நாட்களுக்கு ஊர்திப்படியில் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படாத நிலையில், சில பள்ளிகளில் பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊர்திப்படியில் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு மற்றும் ஏனை அரசு விடுமுறை நாட்களுக்கு ஊர்திப்படி பிடித்தம் செய்யப்படுகிறது என்று. பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

3. அரசாணை (நிலை) எண்.667. நிதி (ஊதியப்பிரிவு)த் துறை, நாள்.27.06.1989-இன் ஊர்திப்படி பெறுவதற்காக பத்தி எண்.2, வ.எண்.66ல் The allowance is not payable during leave (except casual leave), joining time or suspension ना. எனவே,தற்செயல்விடுப்பைத் தவிர பிற விடுமுறை நாட்களில் பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்கள் பணிக்காலமாகக் கருதப்படுவதால் பார்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு ஊர்திப்படி வழங்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன்.

CLICK HERE TO DOWNLOAD காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை நாட்களுக்கு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஊர்திப்படி வழங்கலாம் என்பதற்கான நிதித்துறை தெளிவுரை கடிதம் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.