*பள்ளிக்கல்வித் துறை மற்றும்* *தொடக்கக் கல்வித் துறையின்* *ஐந்தாண்டு கால பதவி உயர்வு* *நெருக்கடி – முடிவை நோக்கி* *எப்போது?*
இன்னும் எத்தனை மாற்றங்கள்?
இன்னும் எத்தனை காத்திருப்புகள்?
இந்த ஐந்தாண்டு கால பதவி உயர்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு பிரச்சினைக்கு இறுதி முடிவை கொண்டு வரப்போவது யார்?
அந்த வரலாற்று நாள் எது?
என்ற கேள்விகள்தான் இன்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு முழுமையாக நடைபெறாததால், ஆசிரியர்கள் நீதிமன்றங்கள் முதல் அரசு அலுவலகங்கள் வரை நீண்ட போராட்டப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஒரு பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கும் காலகட்டத்தில் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
🟢🔵🟣 *பள்ளிக்கல்வித்துறைசெயலாளர்கள்:-*
1. திரு நந்தகுமார் IAS (ஆணையர்)
2. திருமதி காக்கர்லா உஷா IAS (பள்ளிக்கல்வித்துறை செயலாளர்)
3. திரு குமரகுருபரன் IAS (பள்ளிக்கல்வித்துறை செயலாளர்)
4. திருமதி மதுமதி IAS (பள்ளிக்கல்வித்துறை செயலாளர்)
5. திரு சந்திர மோகன் IAS (பள்ளிக்கல்வித்துறை செயலாளர்)
🟢🔵🟣 *பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள்:-*
1. மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி
2. மாண்புமிகு தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் 🟢🔵🟣 *முதலமைச்சர்கள்*
1. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின்
2. மாண்புமிகு தற்போதைய முதலமைச்சர் திரு விஜய்
🟢🔵🟣 *பள்ளிக்கல்வித்துறை (DSE)* *இயக்குனர்கள்:-*
1. முனைவர் க. அறிவொளி (05.06.2023 – 03.06.2024)
2. முனைவர் ச. கண்ணப்பன் (01.07.2024 முதல் இன்று வரை)
🟢🔵🟣 *தொடக்கக் கல்வித்துறை (DEE)* *இயக்குனர்கள்:-*
1. முனைவர் க. அறிவொளி (23.09.2021 – 05.06.2023)
2. முனைவர் ச. கண்ணப்பன் (05.06.2023 – 30.06.2024)
3. திரு சு. சேதுராம வர்மா (01.07.2024 – 15.07.2024)
4. முனைவர் பூ. ஆ. நரேஷ் (16.07.2024 முதல் இன்று வரை)
🟢🔵🟣 *உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர்* *தகுதித் தேர்வு – பதவி உயர்வு* *வழக்கை விசாரித்த அமர்வுகள்:-*
*முதல் அமர்வு (விசாரணை மட்டும்)*
- நீதியரசர் ரிஷிகேஷ் ராய்
- நீதியரசர் சஞ்சய் கரோல்
*இரண்டாவது அமர்வு (விசாரணை* *மட்டும்)*
- நீதியரசர் திபன்கர் தத்தா
- நீதியரசர் பிரசாந்த் குமார் மிஷ்ரா
*மூன்றாவது (இறுதி) அமர்வு*
- நீதியரசர் திபன்கர் தத்தா
- நீதியரசர் மன்மோகன்
தீர்ப்பு நாள் : 01.09.2025
*மறுசீராய்வு மனு மீதான அமர்வு*
- நீதியரசர் திபன்கர் தத்தா
- நீதியரசர் மன்மோகன்
மறுசீராய்வு தீர்ப்பு நாள் : 29.05.2026 🟢🔵🟣 *மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில்* *வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்புகள்:-*
1. மாண்புமிகு நீதியரசர் D. கிருஷ்ணகுமார்
- தீர்ப்பு நாள் : 20.10.2022
- பதவி உயர்வு மற்றும் பணித் தொடர்ச்சி தொடர்பான தீர்ப்பு
2. இரு நீதிபதிகள் அமர்வு
- மாண்புமிகு நீதியரசர் மகாதேவன்
- மாண்புமிகு நீதியரசர் முகமது சபீக்
தீர்ப்பு நாள் : 02.06.2023
- TET அடிப்படையிலான பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பு
3. மாண்புமிகு நீதியரசர் G.K. இளந்திரையன்
- தீர்ப்பு நாள் : 28.11.2025
- 13 ஆசிரியர்களுக்கு ஆதரவாக 4 தீர்ப்புகள்
- ஆண்டு வாரியான (Year-wise Panel) பதவி உயர்வுக்கு ஆதரவான தீர்ப்பு
4. மாண்புமிகு நீதியரசர் P.T. ஆஷா
- தீர்ப்பு நாள் : 09.06.2026
- 58 ஆசிரியர்களுக்கு ஆதரவாக 8 தீர்ப்புகள்
- ஆண்டு வாரியான (Year-wise Panel) பதவி உயர்வுக்கு ஆதரவான தீர்ப்பு இதனுடன்...
🟢🔵🟣 - ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவான 3 இடைக்கால தடை ஆணைகள் (Stay Petitions)
- Caveat மனுக்கள்
- Contempt Petition வழக்குகள் மற்றும் அவற்றின் தீர்ப்புகள்
- இருதரப்பிலும் நிலுவையில் உள்ள புதிய வழக்குகள்
- இனி தாக்கல் செய்யப்பட உள்ள புதிய வழக்குகள்
என பல்வேறு சட்டநடவடிக்கைகள் இருதரப்பிலும் தொடர்ந்து வலிமையாக நடைபெற்று வருகின்றன.
🟢🔵🟣🟢🔵🟣 🔥 *இரண்டு* முதலமைச்சர்கள்...
🔥 *இரண்டு* பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள்...
🔥 *ஐந்து* பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள்...
🔥*ஆறு* இயக்குனர்கள்...
🔥உச்ச நீதிமன்றத்தில் *மூன்று* அமர்வுகள் மற்றும் மறுசீராய்வு...
🔥மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் *பல* வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள்...
இவ்வளவு நிர்வாக மற்றும் நீதித்துறை மாற்றங்களைக் கடந்தும், கடந்த *ஐந்து* ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பதவி உயர்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு பிரச்சினை இன்னும் முழுமையான தீர்வை எட்டவில்லை.
🟢🔵🟣🟢🔵🟣 *ஆனால் ஒரு கேள்வி மட்டும் இன்னும் பதிலுக்காக* *காத்திருக்கிறது...*
*இந்த வரலாற்று முக்கியத்துவம்* *வாய்ந்த பிரச்சினைக்கு இறுதி* *முடிவை கொண்டு வரப்போவது யார்?*
*ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின்* *நீண்டநாள் கனவான பதவி உயர்வு* *கலந்தாய்வு எந்த தேதியில் நடைபெற உள்ளது?*
*அந்த நன்னாளை ஆவலுடன்* *எதிர்நோக்கி, தமிழ்நாட்டின்* *ஆசிரியர்கள் அனைவரும்* *நம்பிக்கையுடன்* *காத்திருக்கின்றனர்.*
*நன்றி🙏💐*
*வணக்கம்🙏💐*
*வாழ்க வளமுடன்🙏💐*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.