பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 11, 2026

பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings

பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings Order denying re-appointment/extension of service to a retired teacher – CEO Proceedings

தமிழ்நாடு சார்நிலைப்பணி பணி ஓய்வு பணி நீட்டிப்பு தஞ்சாவூர் மாவட்டம், செண்டங்காடு. அரசு உயர்நிலைப்பள்ளி, ஓவிய ஆசிரியர் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 இல் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு 01.07.2026 முதல் 2026-2027 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதிவேலை நாள் வரை மறுநியமன அடிப்படையில் பணிநீட்டிப்பு கோரியது - தொடர்பாக.

திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 பிற்பகல் பணி ஓய்வு பெறும் நிலையில் தனியர் கலையாசிரியர் என்பதாலும் அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும் மேற்காணும் அரசாணைகளின் மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டும் தனியருக்கு பணி நீட்டிப்பு வழங்க வழிவகை இல்லை என்பதால் பெறப்பட்ட கருத்துரு அசலாக திருப்பப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்(பொறுப்பு) செயல்முறைகள்

பிறப்பிப்பவர்: திருமதி.அ.சுகப்பிரியா எம்.எஸ்.ஸி.,பி.எட்.எம்ஃபில்., மூ.மு.எண்.4001 / ஆ4/ 2026, நாள். .06.2026

பொருள்:

பள்ளிக்கல்வி தமிழ்நாடு சார்நிலைப்பணி பணி ஓய்வு பணி தஞ்சாவூர் மாவட்டம். செண்டங்காடு, அரசு நீட்டிப்பு உயர்நிலைப்பள்ளி, ஓவிய ஆசிரியர் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 இல் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு 01.07.2026 முதல் 2026-2027 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதிவேலை நாள் வரை மறுநியமன அடிப்படையில் பணிநீட்டிப்பு கோரியது - தொடர்பாக.

பார்வை: 1. அரசாணை (நிலை) எண்.261, பள்ளிக்கல்வி (155(2)) துறைநாள்.20.12.2018.

2. அரசாணை (நிலை)எண்.115, பள்ளிக்கல்வித் துறைநாள்.28.06.2022. (155(2))

3. அரசாணை (நிலை)எண்.151, பள்ளிக்கல்வித் (SE1 (1))

துறைநாள்.09.09.2022.

4.4: 3618/5(1)/2025 : 30.05.2025.

5.செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரின் 4.5.6:37/516/2026, नं: 05.06.2026.

தஞ்சாவூர் மாவட்டம், செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறுவதால் 01.07.2026 முதல் 2026 27 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை பணி நீடிப்பில் பணிபுரிய அனுமதி கோரி பார்வை (5) இல் கண்டுள்ள கடிதத்தில் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் பரிந்துரையுடன் இவ்வலுவலகத்தில் கருத்துரு பெறப்பட்டுள்ளது.

பார்வை 1-ல் காணும் அரசாணையில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயது அடையும் ஆசிரியர்களை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின், கல்வியாண்டு முடியும் வரை அப்பணியிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில்,பாடம் போதிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையினைத் தவிர்க்கவும், மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலையினைத் தவிர்க்கவும், கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதைக் கருதியும், ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதிவரை மறுநியமனம் வழங்கலாம் என்பது அரசின் பொதுவான ஆணையாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு கலை ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளியில் 01.08.2025 ஆசிரியர் நிர்ணயத்தின் படி 6 ஆம் வகுப்பில் 15 மாணவர்களும் 7 ஆம் வகுப்பில் 21 மாணவர்களும் 8 ஆம் வகுப்பில் 16 மாணவர்களும் ஆக கூடுதல் 52 மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது மேலும் இன்றைய தேதியிலும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு குறைவாகவே கல்வி பயின்று வருகின்றனர்.

படி எனவே திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 பிற்பகல் பணி ஓய்வு பெறும் நிலையில் தனியர் கலையாசிரியர் என்பதாலும் அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும் மேற்காணும் அரசாணைகளின் மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டும் தனியருக்கு பணி நீட்டிப்பு வழங்க வழிவகை இல்லை என்பதால் பெறப்பட்ட கருத்துரு அசலாக திருப்பப்படுகிறது.

30/06/2016

முதன்மை கல்வி அலுவலர்(பொ), தஞ்சாவூர்.

பெறுநர் :

நகல் :

சம்மந்தப்பட்டஆசிரியர் (உரியவழியாக)

30/6124

தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, செண்டங்காடு.

நகல் : மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), தஞ்சாவூர். This document is an order regarding the temporary re-employment of a drawing teacher, Mr. Marimuthu, at a government school in Thanjavur district, Tamil Nadu, until the end of the 2026-2027 academic year due to a shortage of teachers for that subject.Teacher: Mr. Marimuthu, Drawing Teacher.School: Government High School, Sendankadu, Thanjavur District.Reason: Re-employed until the end of the academic year 2026-2027 to avoid disrupting students' education due to a teacher shortage. This document is an official communication regarding a teacher's retirement and the rejection of their request for a service extension. The letter indicates that extension of service is not permissible according to regulations. It is addressed to the relevant teacher and copied to the headmaster of the Government Higher Secondary School in Sendangadu and the District Educational Officer in Thanjavur. The document highlights concerns about maintaining student educational standards, specifically mentioning the teacher-to-student ratio.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.