2026-27 - "மகிழ் முற்றம்" மாணவர் குழு அமைத்தல் சார்ந்து. வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை வெளியீடு. 2026-27 – Regarding the formation of "Magizh Mutram" student groups: Guidelines issued by the School Education Department.
மாணவர்களிடையே தலைமைத்துவம். குழுப்பணி, ஒழுக்கம், சமூகப் மனப்பான்மை, ஒற்றுமை. குழுச்செயல்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்" திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2026-27 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் "மகிழ் முற்றம்" மாணவர் குழு செயல்பாடுகளை முறையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திடும் நோக்கில், "மகிழ் முற்றம்" செயல்பாடுகளை மாணவர் பாராளுமன்ற செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயல்பாடானது மாணவர்களை பள்ளி நிகழ்வுகளில் ஆர்வமுடன் ஈடுபடுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி. அவர்களை திறமையான தலைவர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்க அடித்தளமாக அமையும்.
2026-2027 ஆம் ஆண்டிற்கான மகிழ் முற்றம் செயல்பாடுகளை பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD DSE - Magizh Mutram 2026-27 PDF மாணவர்களிடையே தலைமைத்துவம், குழுப்பணி, ஒழுக்கம், சமூகப் மனப்பான்மை, ஒற்றுமை, குழுச்செயல்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்" திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2026-27 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் "மகிழ் முற்றம்" மாணவர் குழு செயல்பாடுகளை முறையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திடும் நோக்கில், "மகிழ் முற்றம்" செயல்பாடுகளை மாணவர் பாராளுமன்ற செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயல்பாடானது மாணவர்களை பள்ளி நிகழ்வுகளில் ஆர்வமுடன் ஈடுபடுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி, அவர்களை திறமையான தலைவர்களாகவும், பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்க அடித்தளமாக அமையும். 2026-2027 ஆம் ஆண்டிற்கான மகிழ் முற்றம் செயல்பாடுகளை பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர் குழு ஒதுக்கீடு (House Allocation) - EMIS-இல் வடிவமைக்கப்பட்டுள்ள 'மகிழ் முற்றம்' (House System) பகுதியிலுள்ள Set House பொத்தானை கிளிக் செய்தவுடன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக மாணவர்களுக்கு வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக குழு ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர், அங்கு கொடுக்கப்பட்டுள்ள House Allocation Excel-யினை கிளிக் செய்து ஆசிரியர்கள் பட்டியலை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கான குழு ஒதுக்கீட்டினை தெரிவித்தல் வேண்டும். இதனை 30-06-2026-ற்குள் அனைத்து பள்ளிகளும் செய்திடல் வேண்டும். * மாணவர் குழு அமைப்பின் வகுப்புத் தலைவர் : (House Class Leader): ஒவ்வொரு வகுப்பிலும் மற்றும் வகுப்பிற்கான பிரிவிலும், ஒவ்வொரு குழுவிற்கான வகுப்புத் தலைவர் (House Class Leader) நியமிக்கப்படுதல் வேண்டும். இத்தேர்வானது, குழுவின் வகுப்புத் தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவ/மாணவியர்களின் பெயர்களை துண்டுச் சீட்டுகளாக எழுதி அம்மாணவர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையிலோ அல்லது கைதூக்கும் முறையிலோ 01-07-2026-ற்குள் தேர்ந்தெடுத்தல் வேண்டும். (குறிப்பு: இரு பாலினர் பாலினர் பயிலும் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும், மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தது மூன்று குழுக்களுக்கான வகுப்பு தலைவர்கள் மாணவிகளாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்). மேலும், ஒவ்வொரு மாதமும் ஐந்து குழுக்களுக்கான வகுப்புத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வேலைநாள் அன்று வகுப்புக்குழுத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். இதன்மூலம் வகுப்பறை அளவில் பெருமளவிலான மாணவர்கள் தலைமைத்துவ பண்பினை வளர்த்துக்கொள்ள நல்வாய்ப்பாக அமையும். மகிழ் முற்றம் – ஆசிரியர்- கட்டமைப்பு : தலைமையாசிரியர் 5-ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் "மகிழ் முற்றம்" மாணவர் குழு அமைப்பினை திட்டமிட்டு வழி நடத்துதல் வேண்டும். • ஒரு ஆசிரியர் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக (HSTC) இருத்தல் வேண்டும். (House System Teacher Coordinator) கொண்ட பள்ளிகள் • மற்ற ஆசிரியர்களுக்கான குழு, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்படுதல் வேண்டும். (House Head Teacher) ஆசிரியர் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக (House System Teacher • ஒரு 5-ற்கும் குறைவான ஆசிரியர்கள் Coordinator) இருத்தல் வேண்டும். கொண்ட பள்ளிகள் • மற்ற ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களுக்கு பொறுப்பு ஆசிரியராக குலுக்கல் முறையில் நியமிக்கப்படுதல் வேண்டும். (House Head Teacher) தலைமையாசிரியர் மட்டும் உள்ள பள்ளிகளில் "மகிழ் முற்றம்" மாணவர் குழு அமைப்பின் அனைத்து செயல்பாடுகளையும் தலைமையாசிரியர் மேற்கொள்ளுதல் வேண்டும். 01-07-2026-ற்குள் மகிழ் முற்றம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் (HSTC) மற்றும் குழுப் பொறுப்பாசிரியர்கள் (House Head Teachers) தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். மேலே அட்டவணையில் குறிப்பிட்டவாறு, சார்ந்த வகுப்பிலிருந்து ஒவ்வொரு மாணவர் குழுவிற்கும் ஒரு மாணவர் குழுத் தலைவர் (House Captain) மற்றும் ஒரு மாணவ அமைச்சர் (Student Minister) நியமிக்கப்படுதல் வேண்டும். - மாணவர் குழுத் தலைவர் (House Captain) ஒவ்வொரு குழுவிற்கும் முதலில் மாணவர் குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். எனவே, ஒவ்வொரு குழுவிற்கும் தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் பெயர்களை துண்டுச் சீட்டுகளாக எழுதி அம்மாணவர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையிலோ அல்லது கைத்தூக்கும் முறையிலோ ஒரு மாணவர் குழுத் தலைவரை 03-07-2026-ற்குள் தேர்ந்தெடுத்தல் வேண்டும். - மாணவர் அமைச்சர் (Student Minister) ஒவ்வொரு குழுவிற்கும் மாணவர் குழுத் தலைவர் (House Captain) தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், இருபாலரும் பயிலும் பள்ளிகளில் குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாணவி எனில் அக்குழுவிற்கான மாணவ அமைச்சர் பொறுப்பிற்கு மாணவன் நியமிக்கப்படுதல் வேண்டும். அல்லது மாணவர் குழுத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் எனில், அக்குழுவிற்கான மாணவ அமைச்சர் பொறுப்பிற்கு மாணவி நியமிக்கப்படுதல் வேண்டும். ஒரு பாலருக்கான பள்ளிகளில், ஒவ்வொரு குழுவிற்குமான தலைவர்களும், அமைச்சர்களும் அப்பள்ளியில் பயிலும் பாலினத்தை பொறுத்து அமையப்பெறும். ஒவ்வொரு குழுவிற்குமான மாணவ அமைச்சர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். மாணவர் அமைச்சர் தேர்விற்கான தேர்தல் பிரச்சாரம்: ஒவ்வொரு குழுவிற்குமான மாணவர் அமைச்சர் வேட்பாளர்களும், கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள ஐந்து அமைச்சரகத்தின் கீழ் பள்ளியளவில் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் செயல்பாடுகளை அதாவது தேர்தல் வாக்குறுதிகளின் (Election Manifesto) அடிப்படையில் பிரச்சாரத்தினை (Campaign) 06-07-2026 அன்று மேற்கொள்ளல் வேண்டும். மாணவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து சீட்டுகளில், ஒவ்வொரு சீட்டிலும் ஒரு மாணவர்க்குழு பெயரையும், கரும்பலகையில் அக்குழுவின் போட்டியாளர்களின் பெயர்களைப் பார்த்து, தாங்கள் வாக்களிக்க விரும்பும் மாணவரின் பெயரை அந்தந்த குழுவிற்கான சீட்டில் எழுதுவர். இதன்மூலம் ஒவ்வொரு மாணவரும் தங்கள் பள்ளிக்கான ஐந்து அவர்களின் வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுப்பர். அமைச்சர்களை பின்னர், சார்ந்த குழுக்கான சீட்டை வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட குழுவிற்கான வாக்குப் பெட்டியில் போட வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.