வட்டாரக் கல்வி அலுவலர் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது -தெளிவுரை வழங்குவது- தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் Letter from the Additional Chief Secretary regarding the fixation of pay for Block Educational Officers and the issuance of clarifications.
CLICK HERE TO DOWNLOAD Beo pay clarification - PDF
பொருள்:
- பள்ளிக் கல்வித் துறை தலைமைச் செயலகம்,
Q1 & 60T60060T-600 009.
கடிதம் எண்.13808/தொ.க.1(1)/2023-7, நாள் 23.06.2026
திரு. சந்தர மோகன்.B, இ.ஆ.ப.,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
பெறுநர்
தொடக்கக் கல்வி இயக்குநர்,
சென்னை-6.
ஐயா,
பொருள்:
தொடக்கக் கல்வி தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி அரசாணை (நிலை) எண்.19, பள்ளிக் கல்வித் (தொ.க.1(1)) துறை, நாள் 07.02.2019-ல், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தினை நிர்வாக காரணங்களுக்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்து ஆணையிடப்பட்டது அடிப்படை விதி 22-B-இன்படி, ஒரு ஊதிய உயர்வு அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது -தெளிவுரை வழங்குவது- தொடர்பாக. அரசாணை (நிலை) бT GODT.19. பள்ளிக் கல்வித் (தொ.க.1(1)) துறை, நாள் 07.02.2019
தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கத்தின் மனு நாள் 10.07.2025 மற்றும் 12.03.2026 தங்களின் கடித 03.02.2026.
ந.க.எண்.019650/ஐ1/2023, நாள் பார்வை:
1. பார்வையில் காணும் அரசாணை மற்றும் கடிதங்களின் மீது தங்களது கவனம் ஈர்க்கப்படுகிறது.
2. பார்வை 1-ல் காணும் அரசாணையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தினை நிர்வாக காரணங்களுக்காக, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்தும், இப்பணியிடத்திற்கு தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2017-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஊதிய அட்டவணையில் நிலை(Level) 17-க்கு பதிலாக நிலை (Level) 18-இல் ரூ.36,900- 1,16,600/- என்ற ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்யலாம் எனவும் ஆணையிடப்பட்டது. மேலும், இவ்வரசாணையில் வட்டாரக் கல்வி அலுவலர்
பதவியினை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு பணியிடமாக கருதுவது குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சிறப்பு விதிகளுக்கு திருத்தம் வெளியிடப்படும் நாள் முதல் இதனை நடைமுறைபடுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
3. பார்வை 2-ல் காணும் தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கத்தின் மனு மற்றும் பார்வை 3-ல் காணும் தங்களது கடிதத்தில், பார்வை 1-ல் காணும் அரசாணையில் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியினை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு பணியிடமாக கருதப்படுவதால் அடிப்படை விதி 22 B-இன்படி, ஒரு ஊதிய உயர்வு அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்ததால் ஏற்பட்ட தணிக்கைத் தடையினை நீக்கம் செய்வது தொடர்பாக கோரப்பட்டதற்கு கீழ்க்காணும் தெளிவுரை வழங்கப்படுகிறது:- "பார்வை 1-60 காணும் அரசாணையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தினை நிர்வாக காரணங்களுக்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலிருந்து பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்து ஆணையிடப்பட்டதன் அடிப்படையில், இவ்வரசாணை வெளியிடப்படும் முன்னர் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பணிபுரிந்து 07.02.2019 அன்று அப்பதவியில் பணியில் இருப்பவர்களுக்கு, மேற்படி அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து(07.02.2019), அடிப்படை விதி 22B-இன்படி, ஒரு ஊதிய உயர்வு அனுமதித்து ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது சரியானதே"
4. இக்கடிதம் மின்கோப்பு
எண்.13808/நிதி(மை.ம.ஆ.பி)துறை/2023,
நாள் 09.06.2026-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது.
தங்கள் நம்பிக்கையுள்ள,
CLICK HERE TO DOWNLOAD Beo pay clarification - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.