TRB உதவிப்பேராசியர் தேர்வில்"மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவருக்கு பூஜ்ஜிய மதிப்பெண்"
உதவிப்பேராசியர் தேர்வில்"மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவருக்கு பூஜ்ஜிய மதிப்பெண்"
கடந்த வியாழக்கிழமை (25.06.2026) அன்று வெளியிடப்பட்ட உதவிப்பேராசிரியர் தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
சில குறைகள் நேற்றே சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு இன்று (27.06.2026)பல நாளிதழ்களிலும் அச்செய்தி வெளிவந்தது.அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தற்போது அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களையும் கூர்ந்து நோக்கியதில் மிகப்பெரிய அதிர்ச்சி கிடைக்கிறது.
மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஒப்பு நோக்க விடைத்தாள் திருத்தாமலேயே வெளியிடப்பட்டதா என்று கேட்கக்கூடிய அளவிற்கு குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணமாக தமிழ்ப்பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள சரவணா தேவி என்கிற மாணவிக்கு இரண்டாம் தாளில் "0" மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்ப்பாடத்தில் மட்டும் விரிவான விடையளிக்கும் இரண்டாம் தாளில் 42 பேருக்கு "0" மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதுபோலவே 106 பேருக்கு இரண்டாம் தாளில் "1" மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மேலும் அதிர்ச்சியாக விரிவான விடையளிக்கும் 50 மதிப்பெண் கொண்ட ஒரே ஒரு வினாவிற்கு அரை மதிப்பெண் எல்லாம் வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் தேர்வு எழுதும் மாணவர் ஒருவர் அரை(1/2) மதிப்பெண் மட்டுமே பெறும் அளவிற்குத்தான் தகுதியோடு உள்ளாரா?
அதோடு மட்டுமல்லாமல் தற்போது அரை மதிப்பெண் பள்ளியில் கூட வழங்குவதில்லை.ஆனால் பல மாணவர்களுக்கு 50 க்கு வெறும் அரை மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஆறாயிரம் பேர் தகுதிபெற்றுள்ள இத்தேர்வில் இரண்டாம் தாளில் மட்டும் 50 மதிப்பெண்ணுக்கு 3762 பேருக்கு 10 மற்றும் அதற்கும் குறைவாக பூச்சியம்"0" வரையிலான ஒற்றை இலக்க மதிப்பெண் மட்டுமே வழங்கப்படுள்ளது.
இரண்டாம் தாளில் ஒற்றை இலக்கம் (Single digit)பெற்ற 23 மாணவர்கள் முதல் தாளில் 150க்கு 100 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
.முதல் மதிப்பெண்ணே 111 தான்.அந்த மாணவரும் இரண்டாம் தாளில் "0" மதிப்பெண் என்பதை அறிக.
தரவரிசைப்பட்டியலில் முதன்மையாக வர வாய்புள்ள 90-99/மதிப்பெண் பெற்ற 152 மாணவர்களுக்கு ஒற்றை இலக்க மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் மூலம் தங்கள் பணி வாய்ப்பை இழக்கின்றனர்.
இதற்கு மாறாக ,
இரண்டாம் தாளில் 50 க்கு 30 மதிப்பெண்ணுக்கு மேல் வழங்கப்பட்ட 114 பேரில் 12 பேர் மட்டுமே 90 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள்.மீதமுள்ள அனைவரும் 90 க்குக் கீழ் மதிப்பெண் பெற்றவர்கள்.
விரிவான விடையளித்தலுக்கு மதிப்பீடு செய்ய என்ன அளவுகோலை வைத்தார்கள் என்று புரியவில்லை.
0,
0.25
0.5. என்றெல்லாம் மதிப்பெண் அளிக்க எந்த வழிகாட்டலும் இல்லை.ஆனால் 50 க்கு கால்,அரை,முக்கால் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளமை தேர்வை கேலிக்குரியதாக்குகிறது.
ஏனெனில் இந்த இரண்டாம் தாள் என்பதே ஒரே ஒரு கேள்விக்கு 50 மதிப்பெண் கொண்டது. இந்தத் தாள் இரண்டின் அடிப்படை சிக்கல் என்னவெனில் இந்த வினாக்கள் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் பொதுவானது என்பதே இந்திய வரலாறு,அரசமைப்பு,சூழலியல் ,அரசின்திட்டங்கள் குறித்த வினாக்களை தமிழ்,ஆங்கிலம்,வணிகவியல் ,கணிதம் முதலான கலைப் பிரிவு மாணவர்கள் எழுதும்போது இவற்றைத் திருத்தம் செய்ய அந்தந்தத் துறைகளில் போதுமான பேராசிரியர் இல்லாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
ஏனெனில் தமிழகம் முழுதும் ஏற்கனவே 7000 க்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய 40 ஆயிரம் பேருடைய விடைத்தாட்களை பேராசிரியர் போதாமையில் யாரை வைத்துத் திருத்தினார்களோ என்ற ஐயம் பட்டியலைப் பார்க்கையில் உறுதியாகிறது.
. இவர்கள் மதிப்பெண் அளித்துள்ள ஒப்பீட்டைப் பார்த்தால் விடைத்தாளே திருத்தாமல் கணினி "அல்காரிதத்தில் "வெறுமனே வகைப்படுத்தப்பட்டதா எனும் சந்தேகம் எழுகிறது.
வழக்கமாகக் கல்லூரிப் பணி அனுபவத்தையும் சேர்த்துப் பட்டியல் வெளியிடும் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகே பணி அனுபவ மதிப்பெண் கணக்கிடப்படும் என்று கூறியுள்ளமையும் தேர்வர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியாயமாக, தர்க்கங்களோடு எழும் இந்த சந்தேகங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
(இந்தத் தரவுகள் அனைத்தும்/ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட PDF இன் physical document மற்றும் chat gpt கொண்டு இரண்டிலும் ஒப்புநோக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.