அகவிலைப்படி கணக்கீட்டை மாற்ற ஊழியர்கள் சங்கம் கோரிக்கை - 8வது ஊதிய குழுவிடம் மனு Employees' union demands change in Dearness Allowance calculation – Petition submitted to 8th Pay Commission.
அகவிலைப்படி கணக்கீட்டை மாற்ற ஊழியர்கள் சங்கம் கோரிக்கை
8வது ஊதிய குழுவிடம் மனு
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 'அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம்' ஆகியவற்றை கணக்கிடும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சங்கம், 8வது ஊதிய குழுவிடம் முக்கிய கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளது.
அந்த மனுவில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:
தற்போது நடைமுறையில் உள்ள பணவீக்க கணக்கீடு, அரசு ஊழி யர்களின் உண்மையான அன்றாட செலவுகளை பிரதி பலிக்கவில்லை தற்போதைய முறையில், 'அகில இந்திய நுகர்வோர் விலை குறி யீட்டின்' 12 மாத சராசரியை அடிப்படையாக கொண்டே அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது
இதில் உணவு மற்றும் பானங்க ளுக்கு 36.75 சதவீதம் மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது
. ஆனால், ஊழியர்களும், ஓய்வூ தியர்களும் தங்களது வருமானத் தின் பெரும் பகுதியை உணவு, மருந்துகள், கல்வி மற்றும் வீட்டு வாடகை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கே செலவிடுகின்ற னர்
.இதனால், அரசு கணக்கிடும் பண வீக்கத்தை விட, ஊழியர்களின் உண்மையான அன்றாட செலவு கள் மிக அதிகமாக உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 142.658 பிரச்னை என்ன?
குறிப்பாக ஓய்வூதியதாரர்கள், தங்களின் ஓய்வூதியத்தில் பெரும் தொகையை மருத்துவ காப்பீடு, மருந்துகள் மற்றும் முதியோர் பராம ரிப்பு செலவுகளுக்கே செலவிடுகின்ற னர். இந்த செலவுகள் மிக வேகமாக உயரும் போது, தற்போது வழங்கப் படும் அகவிலை நிவாரண உயர்வு அவர் களுக்கு போதுமானதாக இருப்பதில்லை.
முக்கிய பரிந்துரைகள்
அரசு ஊழியர்களுக்கென பிரத்யே 'வாழ்க்கை செலவு குறி கமான யீட்டை' உருவாக்க வேண்டும்
* வருங்கால ஊதியம் மற்றும் ஓய்வூ திய திருத்தங்களில், முதியோர் பராம ரிப்பு செலவுகளுக்கு அதிக முக்கியத் துவம் அளிக்கப்பட வேண்டும்
சம்பள உயர்வை தீர்மானிக்கும் 'பிட்மென்ட் பேக்டரில்' ஊழியர் களின் தற்போதைய செலவின உயர்வுகளை முழுமையாக சேர்க்க வேண்டும்.
The document shows a petition from the All India Defence Employees' Federation to the 8th Pay Commission requesting a change in the method of calculating Dearness Allowance (DA) and Dearness Relief (DR).
It highlights concerns that current inflation calculations do not accurately reflect the actual daily expenses of employees, particularly regarding medical costs for pensioners.
The union proposes creating a separate cost of living index specifically for government employees to better account for expenses like food, education, and rent.
The 8th Pay Commission is currently receiving recommendations and petitions from various employee unions regarding salary hikes, fitment factors, and DA merger rules

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.