Review Meeting for CEOs & DEOs on 12.06.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 10, 2026

Review Meeting for CEOs & DEOs on 12.06.2026

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 12.06.2026 அன்று சென்னையில் நடைபெறுகிறது! Review meeting for all District Principal Education Officers and District Education Officers - to be held in Chennai on 12.06.2026



அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 12.06.2026 அன்று சென்னையில் நடைபெறுகிறது

பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 12.06.2026 அன்று நடைபெறுதல் சார்ந்து. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான (இடைநிலைக் கல்வி/ தொடக்கக் கல்வி/ தனியார் பள்ளிகள்) ஆய்வுக்கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்ற விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட கூட்டத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்/அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அந்த அந்த மாவட்டத்தற்குரிய கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கூட்டப் பொருள் சார்பான விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேற்கண்ட கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களை 10.06.2026 மாலை 4.00 மணிக்குள் இவ்வியக்கக பிடி-1 பிரிவு மின்னஞ்சல் (pd1sec.dse@gmail.com) முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு: கூட்டப் பொருள் சார்பான விவரங்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.