மாற்றுப்பணி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு உத்தரவு- DEE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 16, 2026

மாற்றுப்பணி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு உத்தரவு- DEE Proceedings



மாற்றுப் பணி ( Deputation order) பெற்று பணிபுரிபவர்கள் இந்த கல்வியாண்டில் இறுதி வேலை நாளில் பழைய பள்ளிக்கு மீண்டும் திரும்பிட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!!! The Director of Elementary Education has issued an order directing employees currently serving on deputation to return to their original schools on the final working day of the current academic year.

மாற்றுப் பணி ( Deputation order) பெற்று பணிபுரிபவர்கள் இந்த கல்வியாண்டில் இறுதி வேலை நாளில் பழைய பள்ளிக்கு மீண்டும் திரும்பிட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!!!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

[B.. 012424/01/2025,

15.04.2026

பொருள்:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணிகள் ஊராட்சி ஒன்றியம்/அரசு/ தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்களுக்கு கல்வியாண்டில் மாற்றுப் பணி மூலம் பணிபுரிய 2025-208 வழங்கியது - நடப்பு கல்வியாண்டு முடியும் நிலையில் - பள்ளியின் கடைசி வேலை நாளில்- மாற்றுப் பணியில் பணிபுறிய ஆணை பெற்ற ஆசிரியர்களை வழங்குதல் - தொடர்பாக. பணியிலிருந்து விடுவிக்க அனுமதி பார்வை:

1. மாற்றுப் பணி வழங்கக் கோரிய ஆசிரியர்களின் விண்ணப்பங்கள்

2. தொடக்கக் கல்வி இணை இயக்குநரால் (நிர்வாகம்) வழங்கப்பட்ட மாற்றுப் பணி ஆணைகள்

தொடக்கக் கல்வி இயக்கக அலகின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியம்/அரசு தொடக்கப் பள்ளி/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஒரு சில இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2025-2026) தனியர்களின் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கக் கோரி பார்வை 1ல் காணும் விண்ணப்பங்கள் வாயிலாக கோரிக்கைகள் பெறப்பட்டது.

இப்பொருள் தொடர்பாக சார்ந்த ஆசிரியர்களின் கோரிக்கையினை பரிசீலனை செய்து மாற்றுப் பணி கோரியவர்களுக்கு மட்டும் நிர்வாக காரணங்களின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன் கருதி ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 2025-26ம் கல்வியாண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணைகள் வழங்கப்பட்டது.

தற்போது 2025-26 ம் கல்வியாண்டு முடியும் நிலையில் பார்வை 2ல் கண்டவாறு இவ்வியக்கம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அளவிலும் வழங்கப்பட்ட பல்வேறு மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை பெற்றுள் இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்களை பள்ளி இறுதி வேலை நான் முடிவதற்கு முந்தைய நாளில் தற்போது பணிபுரியும் பள்ளியிலிருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் பணியில் சேரும் வகையில் விடுவிக்குமாறும் மேலும், கோடை விடுமுறை முடிந்த பின்னர் 2026-27ம் கல்வியாண்டில் June 2026 முதல் அவரவர்களின் பள்ளியில் பணியினை தொடர வேண்டும் 61001 தெரிவித்துடுமாறு வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இதுகுறித்து எவ்வித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் செயல்படுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடக்கக் கல்வி இயக்குநர்

15.04.2026

பெறுநர்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மின்னஞ்சல் மூலமாக

CLICK HERE TO DOWNLOAD தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.