தேர்தல் பயிற்சி வகுப்பு மற்றும் தபால் வாக்கு செலுத்தும் முறை குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி வெளியீடு! DIPR-CEO TN PR No 24-TN CEO Press Release-Presiding & Polling Officials 2nd Training Program -English -Date 15.04.2026
இன்றைய (15.04.2026) தேர்தல் பயிற்சி வகுப்பு மற்றும் தபால் வாக்கு செலுத்தும் முறை குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி வெளியீடு!
ந.தே.அ. த.தா.செ.வெ.எண்:024
: 15.04.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026
1. 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குத் தமிழ்நாடு முழுவதும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் தழுவிய அளவிலான இரண்டாம் கட்டப் பயிற்சியானது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இன்று நடத்தப்படுகிறது. இந்த இரண்டாம் கட்டப் பயிற்சி முகாமில், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அவர்களின் கடமைகள், பணிகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தலைப்புகளிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) கையாள்வது குறித்த நேரடிப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களின் வாக்குகளை தபால் வாக்குச்சீட்டு மூலம் பதிவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டது. சுமார் 304 வட்சம் வாக்குப்பதிவு அலுவலர்கள் 'படிவம் 12' (Form 12) வாயிலாக தபால் வாக்களிப்பிற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இப்பயிற்சி மையங்களிலேயே அவர்கள் தங்களின் தபால் வாக்குச்சீட்டுகளைப் பெற்று. அதே இடத்திலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதிசெய்யத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தபால் வாக்குப்பதிவிற்கான விதிமுறைகளில் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் காரணமாக படிவம் 12' விண்ணப்பத்தின் வாயிலாக தபால் வாக்களிப்பைத் தேர்வு செய்துள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள், தற்போது அதற்கென அமைக்கப்பட்ட வாக்களிப்பு மையங்களிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். இது. தேர்தல் பணியாளர்கள் தபால் வாக்குச்சீட்டைத் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று, பின்னர் தபால் மூலம் அனுப்பி வைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாறுபட்டதாகும்.
2. வாக்குப்பதிவு நாளன்று, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீத விவரங்களை புதுப்பிப்பதற்காக வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு உதவும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் தனது ECINET செயலித் தொகுப்பில் PRO Module என்ற தொகுதி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தச் தொகுதியின் செயல்பாடுகள். அறிக்கை அணிக்கும் முறை மற்றும் காலக்கெடு ஆகியவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, மாநிலத்திலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மூலம் இன்று இந்தச் செயலியின் கள சோதனை ஆனது மேற்கொள்ளப்பட்டது. GENERAL ELECTION – TAMILNADU LEGISLATIVE ASSEMBLY, 2026
1. As part of the conduct of the General Elections to the TNLA, 2026, training for various stakeholders including Polling Personnel is being conducted across the State of Tamil Nadu. The statewide second level training for the Presiding Officers along with Polling Officials is being conducted today. In this 2nd training programme the Polling Officials were trained on subjects related to their duties, roles and responsibilities along with hands on training of the EVM, the Polling Officials were provided with the facility to cast their votes by postal ballot, and around 3.04 lakh of Polling Officials, have applied for postal voting through Form 12.
Appropriate arrangements were made to ensure that they receive their postal ballots at the training center and to cast their vote at the same venue. Due to amended laws, the Polling Officials who had opted for postal ballots through Form 12 application, now has to cast their votes in the facilitation centers itself which is different from, the earlier practice of Polling Personnel taking the Postal Ballot to home and then sending by post later.
2. The Election Commission of India have developed the PRO Module in ECINET application for the Presiding Offers to update the 2 hourly turnout report on Poll day. For clear understanding of the reporting workflow, system functionalities, and timelines, the field testing of the PRO Module has been conducted on 15-04-2026 for the Presiding Officers across all the Assembly Constituencies of the State.
CLICK HERE TO DOWNLOAD DIPR-CEO TN PR No 24-TN CEO Press Release-Presiding & Polling Officials 2nd Training Program -Tamil-Date 15.04.2026 PDF
CLICK HERE TO DOWNLOAD DIPR-CEO TN PR No 24-TN CEO Press Release-Presiding & Polling Officials 2nd Training Program -English -Date 15.04.2026 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.