பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - 2026-27 திட்டச் செயல்பாடு - இயக்குநர் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 28, 2026

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - 2026-27 திட்டச் செயல்பாடு - இயக்குநர் செயல்முறைகள்



பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் - 2026-27 திட்டச் செயல்பாடு - இயக்குநர் செயல்முறைகள் - Directorate of Non-Formal and Adult Education – New India Literacy Programme – 2026-27 Programme Implementation – Director's Proceedings

CLICK HERE TO DOWNLOAD 2026-2027 NILP Circular PDF


கற்போர் மதிப்பீடு நாள் 18.10.2026

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06

முன்னிலை : முனைவர். பெ. குப்புசாமி

ந.க. எண். 155/ஆ2/2026

நாள்: 28.04.2026

பொருள்: பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் - புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2026-2027-திட்டச் செயல்பாடுகள் மேற்கொள்ளுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் பார்வை:

சார்பு

1. 2022-23, பள்ளிக் கல்வித் துறை மான்யக் கோரிக்கை எண் 43, அறிவிப்பு எண். 34, நாள் 11.04.2022

2. 2026-27ஆம் ஆண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட ஏற்பளிப்புக் குழு கூட்ட குறிப்புகள் (PAB) நாள்: 19.03.2026

*****

தமிழ்நாட்டில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில், முற்றிலும் தன்னார்வலர் முறையில் 38 மாவட்டங்களிலும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் (2022-27) செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 30 இலட்சம் கல்லாதோர் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி பெற்று பயனடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் முழு எழுத்தறிவை விரைவில் எட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, லடாக், கோவா, மிசோரம், திரிபுரா மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் 2026-27ஆம் ஆண்டில் முழு எழுத்தறிவை எட்டும் வகையில் தனிக்கவனம் செலுத்தி இத்திட்டத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. குடியிருப்பிலும், எனவே, இவ்வாண்டில் ஒவ்வொரு ஒவ்வொரு முழுமையாக கணக்கெடுத்து எவரும் விடுபடாதவாறு கல்லாதோரை 15.06.2026 க்குள் கண்டறிதல் வேண்டும்.

செயல்பாட்டுக் காலம் கற்பித்தல் மற்றும் கற்றல் கால அளவு 2026-ஜீன் மாதம் அக்டோபர் மூன்றாம் வாரம் முதல் இரண்டாம் ஒரு நாளைக்கு 2% மணிநேரம் எனக் கொண்டு மொத்தம் 200 மணிநேரம் இறுதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடைபெறும் மாதம் 2026-அக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் வாரம் முடிய கல்லாதோர் முழுமையான மறு கணக்கெடுப்பு :

இத்திட்டம் சார்ந்து மாவட்டங்களில் கள ஆய்வுகள் மேற்கொண்டதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்னும் கண்டறியப்படாத எழுதப் படிக்கத் தெரியாதோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பது இவ்வியக்ககத்தால் அறியப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு முழுமையான மறு கணக்கெடுப்பின் வாயிலாக எழுதப் படிக்கத் தெரியாதோரை 100% முழுமையாகக் கண்டறிந்து அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்க உறுதியான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும்.

கல்லாதோரின் விவரங்களை மறு கணக்கெடுப்பின்படி சேகரிக்கும் வழிமுறைகள் அனைத்து மாவட்டங்களிலும், ஊரக மற்றும் நகர்புற ஒன்றியங்களில் எந்த ஒரு குடியிருப்பும் விடுபடாத வகையில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத கல்லாதோரின் விவரங்களை பின்வருமாறு சேகரிக்க வேண்டும்.

பள்ளிகள் அளவில் பராமரிக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பதிவேட்டின் படி விவரங்கள் பெறுதல் வேண்டும்.

ஒவ்வொரு கிராமங்கள் / வார்டுகள் அளவில், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களில் / அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே பராமரிக்கப்படுகின்ற குடும்ப விவரம் / சர்வே பதிவேட்டில் "கல்வி நிலை" என்கிற பகுதியில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதோரின் விவரங்ளை அருகே உள்ள அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் உதவியுடன் பெறுதல் வேண்டும்.

* வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அல்லது தொடர்புடைய அலுவலகங்களில் பராமரிக்கப்படும் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களின் பதிவேடுகள், மகளிர் சுய உதவிக் குழு சார்ந்த பதிவேடுகள் வாயிலாக கல்லாதோரின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும்

* பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் உதவியுடன் அந்தந்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கல்லாதோர் விவரங்களைச் சேகரிக்க வேண்டும். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை மாணவர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.

* மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச் சேகரிக்க வேண்டும் 100 நாள் வேலைத் திட்ட பணித்தள களப்பணியாளர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல் வேண்டும்.

* கிராம கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல் வேண்டும்.

நேரு யுவகேந்ரா மற்றும் மாவட்ட, ஒன்றிய அளவில் சிறப்பாக செயல்படுகின்ற தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல் வேண்டும்.

ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற பணியாளர்கள், படித்த இளைஞர்கள், மற்றும் தன்னர்வலர்களின் உதவியுடன் கல்லாதோரின் விவரங்களைச் சேகரித்தல் வேண்டும்.

கற்போர் மற்றும் தன்னார்வலர்கள் விவரங்கள் பதிவு :

ஏற்கனவே * கண்டறியப்பட்ட அனைத்து கற்போரின் விவரங்களும் வழங்கப்பட்டுள்ள உரிய (Survey) படிவங்களில் அந்தந்த கற்போர் மையங்கள் அளவில் கற்போர் விவரப் பதிவேடாகப் பராமரித்தல் வேண்டும். * இவ்வியக்ககத்தின் வாயிலாக Google Spreadsheet-இன் மூலம் கற்போர் மற்றும் தன்னார்வலர்கள் சார்ந்து கேட்கப்படுகின்ற விவரங்களை விவரங்களை உடனடியாக வழங்கிடும் வகையில் அனைவரது தரவுகளும் துல்லியமாகப் (Excel படிவத்த்தில்) பராமரிக்கப்பட வேண்டும்.

கற்போர் எழுத்தறிவு மையங்கள் அமைத்தல் (Learners' Literacy Centers) :

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் கற்போர் மையங்கள் செயல்பட வேண்டும். * கற்போருக்கு வசதியாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை பள்ளிகளில், குடியிருப்புப் பகுதியின் பொதுவான இடங்களில், கற்போர் பணிபுரியும் நூறு நாள் வேலைத் திட்டம் மற்றும் தொழிற்சாலை வளாகங்களில் தேவையின் அடிப்படையில் மேற்கொள்ளலாம்.

* கற்போரின் விவரங்கள் அனைத்தும் அவர்கள் வசிக்கும் குடியிருப்புகள்

சார்ந்த பள்ளிகளில் பராமரிக்கப்பட வேண்டும்.

* கற்போர் மையங்கள் எளிதில் கற்போர் வந்து செல்லும் வகையிலும், போதுமான காற்றோட்டம், வெளிச்சம், குடிநீர், கழிவறை, சாய்தள நடைமேடை வசதி மற்றும் மின்சார வசதிகளைக் கொண்ட மையங்களாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

கற்போர் எண்ணிக்கைக்கேற்ப ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்தறிவு மையங்களை ஒரே பள்ளி வளாகத்தில் அமைத்துக் கொள்ளலாம்.

மையங்களின் எண்ணிக்கைக்கேற்ப தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும்.

· மையங்களாக செயல்படும் பள்ளிகள், அக்குடியிருப்புகளில் கல்லாதோர் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவை வழங்கி நிறைவு செய்யும் வரை அப்பள்ளிகள் எழுத்தறிவு மையங்களாக செயல்பட வேண்டும்.

கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள்:

· பள்ளி வேலை நாள்களில் மட்டும் கற்போர்களுக்கு ஒரு நாளைக்கு 2/2 மணிநேரம் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளைக் கற்போர் எழுத்தறிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD 2026-2027 NILP Circular PDF × 200 மணிநேரக் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளை இணைப்பு-2இல் தினசரி கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி மேற்கொள்ள வேண்டும்.

பாடத்திட்ட மையம் சார்ந்த பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும், தன்னார்வலர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி ஊக்கப்படுத்துதல் வேண்டும்.

தொடங்கும் முன், கற்போருக்கு கற்பித்தல் செயல்பாடுகளைத் தன்னம்பிக்கை சார்ந்த கதைகள்/நிகழ்வுகளைக் கூறுதல், மனதிற்கு உற்சாகம் தரும் பாடல்களைப் பாடுதல் மற்றும் தினசரி பத்திரிகைச் செய்திகளைப் படிக்கக் கூறுதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

2025-2026 ஆண்டில் கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்ட கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் சார்ந்த எழுத்தறிவு மையங்களுக்கு வழங்கப்பட்டதை உறுதி செய்தல் வேண்டும். அக்கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கண்டிப்பாக தன்னார்வலர்கள் பயன்படுத்த தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும், மையம் செயல்படாத நேரங்களில் அவ்வுபகரணங்களை மாணவர்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

தினசரி பாடத்திட்டத்திற்கேற்றவாறு எழுதும் பயிற்சியைத் தொடர்ந்து வழங்குவதை தலைமையாசிரியர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்தல் வேண்டும். தினசரி பத்திரிகைகளில் உள்ள சொற்களில் தாங்கள் கற்ற எழுத்துக்களைக் கண்டறிந்து வட்டமிடுதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

* அனைத்து கற்போருக்கும் பயிற்சிக் கட்டகம், எழுது பலகை (Slate) மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும்

முழு எழுத்தறிவு இலக்கை நோக்கிய நடவடிக்கைகள்:

பள்ளி செல்லாக் குழந்தைகளையும் அனைவரையும் ஒருங்கிணைந்த 100% கண்டறிந்து அவர்கள் பள்ளிக் கல்வித் திட்ட வழிகாட்டுதல்களின்படி முறையான பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

* அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்ந்த குடியிருப்புப் பகுதிகளில் கல்லாதோர் எவரும் இல்லை என உறுதி செய்து பின்னர் பள்ளி அளவிலான பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், மையம் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகியோரின் ஒப்புதல் பெற வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD 2026-2027 NILP Circular PDF * அதனைத் தொடர்ந்து ஒன்றிய அளவில் தொகுத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரின் ஒப்புதல் பெறுதல் வேண்டும்.

* மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் ஒப்புதல் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

* அனைத்து கல்லாதோரையும் கண்டறிந்து அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கினால் மட்டுமே இம்முயற்சி சாத்தியமாகும் என்பதைக் கவனத்தில் கொண்டு, இத்திட்ட செயல்பாடுகளை முன்குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைத் தவறாது பின்பற்றி முழு எழுத்தறிவு என்கிற இலக்கை விரைவில் அடைந்திடும் வகையில் திட்டச் செயல்பாடுகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்திற்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு அக்டோபர் 2026 மூன்றாவது வாரம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாட்டை இத்திட்டத்தின் மூலம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உருவாக்கிட அனைவரும் சீரிய முறையில் பணியாற்ற வேண்டும்.

எனவே, தங்கள் மாவட்ட ஆட்சியர் (District Collector) தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் (District Literacy Mission Authority) வழிகாட்டுதல்களைப் பெற்று, கற்போர் மையங்கள் சார்ந்த பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் பெருநிறுவனங்கள், அரசு சார் பொதுத்துறை பெருநிறுவனங்கள், இதர அரசு தொடர்புடைய துறைகள் மற்றும் திட்டங்களின் ஒருங்கிணைப்புடன் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட செயல்பாடுகளை சிறப்பாகச் செயல்படுத்தி தங்கள் மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்கிற சிறப்பான நிலையை விரைவில் அடைவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு :

1.2026-27ஆம் ஆண்டிற்கான கற்போர் உத்தேச இலக்கு 2. தினசரி பாட அட்டவணை

3. கற்போர் விவரப்படிவம் மற்றும் தன்னார்வலர் விவரப்படிவம்

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD 2026-2027 NILP Circular PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.