திட்டமிட்டபடி மே 3–ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: CBSE - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 30, 2026

திட்டமிட்டபடி மே 3–ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: CBSE



திட்டமிட்டபடி மே 3–ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: CBSE Class 12 Exam Results in the 3rd Week of May, As Scheduled: CBSE

புது தில்லி, ஏப்.29: ‘12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எண்ம வழி மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நிகழ்ந் துள்ளதாகவும், அதனால் தேர்வு முடிவுகள் வெளியாவ தில் தாமதம் ஏற்படும் என வெளியாகும் தகவல்கள் தவ றானவை' என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.

‘ஏற்கெனவே அறிவித்தபடி, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே 3-ஆவது வாரத்தில் மாணவர்கள் எதிர் பார்க்கலாம்' என்றும் சிபிஎஸ்இ தெரிவித்தது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் புதன்கிழமை அளித்த பேட்டி: 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி சிறப்பாக நடைபெற்று வருகி றது. இந்த ஆண்டு, முழு அளவில் திரையில் மதிப்பிடும் முறையின் (ஓஎஸ்எம்) கீழ், அதாவது எண்ம வழியில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படு வது மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும்.

இதனிடையே, இந்த எண்ம வழி மதிப்பீடு முறையில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் கார ணமாக, தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆக லாம் என சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. இந் தத் தகவல் தவறானதாகும்.

இந்த தவறான செய்தியை மாணவர்கள் நம்ப வேண் டாம். விடைத்தாள்கள் திருத்தும் பணி திட்டமிட்ட படி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே, மே 3-ஆவது வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்பார்க்கலாம். அதுவரை மக்கள் காத்திருக்க வேண்டும் என்றார்.

12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் ஓஎஸ்எம் முறை யில் (எண்ம வழி) திருத்தம் செய்யும் நடைமுறையை தற் போதைய 2026 பொதுத் தேர்வு முதல் சிபிஎஸ்இ அறி முகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.