இந்திய தேர்தல் ஆணையம்
நிர்வாசன் சதன், அசோகா சாலை, புது தில்லி-110001 6. ECI/PN/040/2026
: 22.03.2026
செய்திக் குறிப்பு
பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உறுதி அளிக்கப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் மற்றும் வாக்காளர் உதவி வழங்கப்பட உள்ளன.
1. அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள சட்டப் பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மார்ச் 15, 2026 அன்று அறிவித்தது.
2. 2,18,807 வாக்குச் சாவடிகளில் ஒவ்வொன்றிலும் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் (AMFs) மற்றும் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர் உதவி வழங்கப்படுவதை உறுதி செய்ய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தேர்தல் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகளுக்கு (CEOS)
3. உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகளில் (AMF) குடிநீர், நிழலுடன் கூடிய காத்திருப்புப் பகுதி, தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை, போதிய வெளிச்சம், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான முறையான சாய்வுதளம் (ramp), தரப்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு அறை மற்றும் முறையான வழிகாட்டி பலகைகள் ஆகியவை அடங்கும். வாக்காளர்கள் தங்களது முறைக்காகக் காத்திருக்கும்போது அமருவதற்கு ஏதுவாக, வரிசையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் பெஞ்சுகள் (benches) அமைக்கவும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது. 4. வாக்காளர் விழிப்புணர்வை வலுப்படுத்த, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நான்கு சீரான மற்றும் தரப்படுத்தப்பட்ட வாக்காளர் வசதி சுவரொட்டிகள் (VFP) முக்கியமாகத் காட்சிப்படுத்தப்படும். இந்த சுவரொட்டிகளில் வாக்குச் சாவடி விவரங்கள்,வேட்பாளர் பட்டியல், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை. அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களின் பட்டியல் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறை ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
5. வாக்காளர்கள் தங்களின் வாக்குச் சாவடி எண் மற்றும் அந்தந்த சாவடியின் வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண்ணைக் கண்டறிய உதவுவதற்காக, ஒவ்வொரு வாக்குச் சாவடி அமைவிடத்திலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLOs)/அதிகாரிகள் குழுவுடன் கூடிய வாக்காளர் உதவி மையங்கள் (VABs) அமைக்கப்படும். வாக்காளர்கள் வாக்குச் சாவடி வளாகத்தை நெருங்கும் போது எளிதில் தெரியும் வகையில் இந்த உதவி மையங்கள் முக்கிய வழிகாட்டிப் பலகைகளைக் கொண்டிருக்கும்
This is a press release from the Election Commission of India regarding the upcoming 2026 general elections to legislative assemblies and by-elections, focusing on voter facilities.
The Election Commission of India announced the election schedule on March 15, 2026, for Assam, Kerala, Puducherry, Tamil Nadu, and West Bengal, along with by-elections in 6 states.
Assured Minimum Facilities (AMFs) like drinking water, sheds, toilets, ramps for disabled voters, and lighting will be provided at all 218,807 polling stations.
Standardized Voter Facilitation Posters (VFP) detailing candidate lists, do's and don'ts, and voting procedures will be displayed at all polling stations to raise voter awareness.
Voter Assistance Booths (VABs) with polling booth level officers will be set up to help voters locate their polling booth number and serial number in the voter list 6. வாக்காளர்களின் வசதிக்காகத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முயற்சிகளில் ஒன்றாக. வாக்குச் சாவடி நுழைவாயிலுக்கு வெளியே வாக்காளர்களுக்கான கைபேசி வைப்பு அறை வசதி வழங்கப்படும். வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைவதற்கு முன் தங்களது கைபேசியை (அணைக்கப்பட்ட நிலையில்) நியமிக்கப்பட்ட தன்னார்வலரிடம் ஒப்படைத்துவிட்டு, வாக்களித்த பிறகு அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.
7. குறைந்தபட்ச வசதிகள் (AMF) மற்றும் அது தொடர்பான அணுகல் நடவடிக்கைகள் கட்டாயமானது என்றும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இது கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும் என்றும் ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது. அனைத்து வாக்காளர்களுக்கும் தடையற்ற மற்றும் இனிமையான வாக்குப்பதிவு அனுபவத்தை உறுதி செய்வதற்காக, தேர்தல் தேதிகளுக்கு முன்னதாகவே தேவையான பணிகளை முடிக்குமாறு அனைத்து களப் பணியாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
This document outlines new instructions from the Election Commission for polling stations to ensure a smooth voting experience.
A mobile phone storage facility will be provided outside the polling station entrance for voters to leave their devices in a switched-off state.
Mandatory Minimum Facilities (AMF) and accessibility measures must be monitored and strictly followed at all polling stations.
Field staff are instructed to complete necessary preparations for a seamless voting experience well before the election dates.
The document is signed by P. Pavan, Deputy Director



No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.