என்சிஇஆர்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு
This image is a Tamil newspaper article regarding the formation of an expert committee to review legal education curricula for all classes under NCERT following controversy over an 8th-grade textbook section.
The Central Government informed the Supreme Court about forming a panel to review legal education curricula across all levels.
The Supreme Court previously ordered NCERT to withdraw 8th-grade social science books containing controversial content titled 'Corruption in the Judiciary'.
NCERT issued an unconditional apology for the inclusion of the controversial section, which criticized judicial corruption and case backlogs.
The Supreme Court directed that the new panel must include a retired judge, an academic, and a prominent lawyer
அனைத்து வகுப்புக ளுக்குமான சட்டக் கல்வி தொடர்பான பாடத்திட்டத்தை மறு ஆய்வு செய்து இறுதி செய்ய நிபுணர் குழு அமைக்கப் பட்டுள்ளதாகஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
என்சிஇஆர்டி வெளியிட்ட 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத் தில் நீதித் துறையில் ஊழல்' என்ற தலைப் பிலான பாடப் பிரிவு இடம்பெற்றது. இந்தப் பிரிவில், 'ஊழல், வழக்குகளின் தேக்கம், நீதிபதிகளின் பற்றாக்குறை ஆகி யவை நீதித் துறையின் சவால்களாக உள் ளன; நீதிமன்றத்துக்குள் மட்டுமல்லா மல், நீதிமன்றத்துக்கு வெளியேயும் தங் களின் நடத்தையை நிர்வகிக்கும் விதிமு றைகளுக்கு நீதிபதிகள் கட்டுப்பட்டவர் கள்' என்று குறிப்பிடப்பட்டது.
இந்தப் பாடப் பிரிவு பெரும் சர்ச்சை யான நிலையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் (எண்ம வடி வம் உள்பட) உடனடியாகத் திரும்பப்
பெற என்சிஇஆர்டி -க்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பாடப் பிரிவு சேர்க்கப்பட்டதற்காக என்
சிஇஆர்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. மேலும், சமூக அறிவியல் பாடப் புத்தகம் முழுமையாகத் திரும் பப் பெறப்பட்டுவிட்டதாகவும் தெரிவித் தது.
இருப்பினும், எட்டாம் வகுப்புக்கு மட்டுமன்றி அனைத்து வகுப்புகளுக்கு மான சட்டக் கல்வி தொடர்பான பாடத் திட்டத்தை இறுதி செய்ய நிபுணர் குழு ஒன்று அடுத்த ஒருவாரத்துக்குள் அமைக் கப்பட வேண்டும். அதில், ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு கல்வியாளர் மற்றும் பிரபல வழக்குரைஞர் உள்ளிட்டோர் ஒருவாரத் துக்குள் உறுப்பினர்களாகச் சேர்க்கப் படவேண்டும் என கடந்த மார்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர் பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக் கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டக் கல்வி தொடர் பான பாடத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய மூத்த வழக்குரைஞரும் முன்னாள்
அட்டர்னி ஜெனரலுமான கே.கே.வே ணுகோபால், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய தேசிய நீதித் துறை அகாதெமியின் இயக் குநருமான அனிருத்த போஸ் மற்றும் துணைவேந்தரைக் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தீர்ப்புகளை விமர்சிக்க உரிமை உண்டு: என்சிஇஆர்டி 8-ஆம் வகுப்பு பழைய சமூக அறிவியல் புத்தகத்தில் நீதித் துறை குறித்த பாடத்தில் உச்சநீதிமன் றத்தின் அண்மைத் தீர்ப்புகள் குடிசை யில் வசிப்போரை ஆக்கிரமிப்பாளர்கள் போல் சித்தரிக்கிறது என குறிப்பிட்ட தற்கு எதிராக என்சிஇஆர்டி முன்னாள் உறுப்பினர் பங்கஜ் புஷ்கர் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளு படி செய்தது. அப்போது சூர்ய காந்த் கூறியதாவது: மனுதாரர் குறிப்பிட்ட தக வல்கள் தீர்ப்புகள் குறித்த கண்ணோட் டமாகும். அது ஆரோக்கியமான விமர் சனம். இந்த புத்தகத்தில் நீதித்துறையின் அமைப்பு, செயல்பாடுகளும் குறிப்பிடப் பட்டுள்ளன. தீர்ப்புகளை விமர்சிக்க மக் களுக்கு உரிமை உள்ளது என்றார்.
Sunday, March 22, 2026
New
NCERT சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு
NCERT Textbooks
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.