அறிவிப்போடு நிற்கிறது ஊதிய உயர்வு கவுரவ விரிவுரையாளர்கள் அதிருப்தி Salary Hike Remains Mere Announcement; Guest Lecturers Express Dissatisfaction.
சென்னை, மார்ச் 24-கவுரவ விரிவுரையாளர்க ளுக்கு உயர்த்தப்பட்ட ஊதி யத்தை, மார்ச் மாதத்துக்கு பதிலாக, ஜூன் மாதம் முதல் வழங்க, உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுதும் உள்ள, 184 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 8,741 கவுரவ விரிவுரையா ளர்கள், பணியாற்றி வருகின் றனர். இவர்களுக்கு, 25,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
போராட்டம்
இச்சூழலில், யு.ஜி.சி., நிர்ணயித்தபடி, 57,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
கான அதைத் தொடர்ந்து, கவு ரவ விரிவுரையாளர்களுக் ஊதியம், மேலும் 5,000 ரூபாய் உயர்த்தி, வரும் மார்ச் 1ம் தேதி முதல்,
30,000 ரூபாய் வழங்கப் படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.
இதையடுத்து, கவுரவ விரி வுரையாளர்கள், தங்கள் பணி புறிக்கணிப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பிப்ரவரி மாதம் நடத்திய பணி புறக்க ணிப்பு போராட்டம் காரண மாக, கவுரவ விரிவுரையாளர் களுக்கு, அந்த மாதத்திற்கான ஊதியம் பிடித்தம் செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், கவுரவ விரி வுரையாளர்களுக்கு, மார்ச், ஏப்ரல் மாதம் உயர்த்தப் பட்ட ஊதியம் 5,000 ரூபாய், ஜூன் அல்லது ஜூலை மாதம் வழங்கப்படும் என, உயர்கல்வித்துறை அறிவித் துள்ளது. இதனால், கவுரவ விரிவுரையாளர்கள் கடும் அதிருப்தியாகி உள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதி இருப்பதால், ஊதிய உயர்வுக்கான நிதியை விடு விக்க முடியாத நிலையில்,
அரசு உள்ளது.
மன உளைச்சல்
27ம் இதனால், மார்ச், ஏப் ரல் மாதத்துக்கான. உயர்த் தப்பட்ட ஊதியம் 5,000 ரூபாயை, 2026 நிதியாண்டு, நிதி ஒப்புத லில் பெற்று வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி, உயர்த்தப்பட்ட ஊதி யம், ஜூன் அல்லது ஜூலை மாதமே விடுவிக்கப்படும். பிப்ரவரி மாத
சம்ப ளம் பிடித்தம்; அறிவித்த ஊதிய உயர்வும் இப்போது இல்லை; மே மாதம் ஊதி யமும் இல்லை. இது, எங்க ளுக்கு மிகுந்த அதிருப்தியை யும், மன உளைச்சலையும்
ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
The provided Tamil news article reports on the dissatisfaction among guest lecturers in Tamil Nadu regarding delayed pay raises.
The Tamil Nadu Higher Education Department has decided to postpone the implementation of a promised ₹5,000 monthly pay raise for guest lecturers from March to June or July.
This decision affects 8,741 guest lecturers across 184 government arts and science colleges, whose salary will remain at ₹25,000 for now instead of increasing to ₹30,000 as announced.
Lecturers are dissatisfied due to the delay, the deduction of February salaries following a strike, and receiving no pay in May.
The government cited the Election Model Code of Conduct as the reason for the delay in releasing the funds.
Tuesday, March 24, 2026
New
அறிவிப்போடு நிற்கிறது ஊதிய உயர்வு கவுரவ விரிவுரையாளர்கள் அதிருப்தி
salary issues
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.