இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு -Case registered against two Secondary School Teachers' Association executives
ஜன. 14: காவல் துறையை அவதூ றாக சித்தரித்து, பொய்யான தகவலை பரப்பிய தாக கூறி இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் இரு நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஜன.12-ஆம் தேதி எழும்பூர் ரயில் நிலைய தெற்கு நுழைவு வாயில் அருகேயுள்ள காந்தி இர்வின் சாலையில் இடைநிலை ஆசிரி யர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடப்போ வதாகக் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, அங்கு கூடிய சில ஆசிரியர்கள் போலீ ஸாரின் அறிவுறுத்தலின் பேரில் கலைந்து சென்றனர்.
ஆனால், அங்கு தனியாக நின்று கொண் டிருந்த எஸ்எஸ்டிஏ ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி குணசேகரனை வாகனத்தில் ஏற்றி, அறிவுரை வழங்கி அவரது சொந்த ஊரான விழுப்புரத்துக்கு ரயில் மூலம் அனுப்பி வைத் ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட் டது.
இந்த நிலையில், குணசேகரனை காவல் துறையினர் மிரட்டியதாகவும், கஞ்சா வழக்கு தொடருவோம் எனக் கூறியதாகவும் சங்க நிர் வாகிகள் ராபர்ட மற்றும் குணசேகரன் ஆகி யோரின் உரையாடல் தொலைகாட்சிகளில் செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பானது.
இதையடுத்து, காவல் துறையை அவதூறாக சித்தரித்து பொய்யான தகவலை பரப்பியதா கக் கூறி, ராபர்ட், குணசேகரன் உள்ளிட்ட சில ரின் மீது எழும்பூர் போலீஸார் செவ்வாய்க்கி ழமை வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வரு கின்றனர்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.