'டெட்' தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் - அன்புமணி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 14, 2026

'டெட்' தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் - அன்புமணி



'டெட்' தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்

சென்னை, ஜன. 14:

'டெட்' முடிவுகள் மற்றும் முதுநிலை ஆசி ரியர் தேர்ச்சி பட்டியலை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளி யிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் கள், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக் கான தகுதித் தேர்வுகள் கடந்தாண்டு நடத்தப்பட்டன. தேர்வு வாரியம் நினைத்தால் இந்தத் தேர்வு களின் முடிவுகளை ஒரு மாதத்தில் வெளியிட்டுவிட முடியும். ஆனால், தேர்வு நடைபெற்று இரு மாதங்கள் முடிவடையும் நிலையில், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். இதேபோல், 2026 பேரவைத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக பணி நியமன ஆணைக ளைப் பெற வேண்டும் என்று எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வர்கள் விரும்பு கின்றனர். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளையும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப் பட்டவர்கள் பட்டியலையும் அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

இழப்பீடு:

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கர்லாம்பாக்கம் காலனி கிராமத்தில் விநியோகிக்கப்பட்ட பாக்டீரியா கலந்த குடிநீரைக் குடித்தது கடந்த டிச. 27-இல் இருவர் உயிரிழந்ததுடன், 40-க்கும் மேற்பட்டோர் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு அரசு பொறுப் பேற்று உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்க ளுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.