SSLC பெயர்ப்பட்டியல் தயாரிக்க 27.11.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு - TML கட்டணம் செலுத்தவும் உத்தரவு - DGE செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 19, 2025

SSLC பெயர்ப்பட்டியல் தயாரிக்க 27.11.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு - TML கட்டணம் செலுத்தவும் உத்தரவு - DGE செயல்முறைகள்!



Extension of time for preparation of SSLC name list till 27.11.2025 - Order to pay TML fee - DGE processes! - SSLC பெயர்ப்பட்டியல் தயாரிக்க 27.11.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு - TML கட்டணம் செலுத்தவும் உத்தரவு - DGE செயல்முறைகள்!

பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம். சென்னை-6 2025 2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம் செய்தல் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் மற்றும் புதிய பள்ளிகள் பதிவு செய்தல் - தொடர்பாக.

பார்வை:

அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள். நாள்: 31.10.2025.

பார்வையில் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகளில். 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கரது விவரங்களை 31.10.2025 முதல் 19.11.2025 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஒரு சில பள்ளிகளின் மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன எனத் தெரியவருவதால், பத்தாம் வகுப்பு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு 27.11.2025 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதன்பின்னர், இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது.

புதிய பள்ளிகளை பதிவு செய்தல்-

ஏற்கனவே பள்ளியினை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பதிவு செய்யாத புதிய பள்ளிகள் மட்டும் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் School Registration-க்கு விண்ணப்பித்து பின்பு, District Level-

முதன்மைக் கல்வி அலுவலரால் Approval வழங்கிட வேண்டும். அதன்பின்னரே, அப்பள்ளி மாணாக்கர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலும். எனவே, புதியப் பள்ளிகள் தங்கள் பள்ளியினை பதிவு செய்வதற்குரிய தகுந்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.

TML கட்டணம்:-

2025-2026 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான கட்டணம் ரூ.300/-ஐ https://dgeapp.Inschools.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று 27.11.2025-க்குள் செலுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளும் (எந்த ஒரு பள்ளியும் விலக்கு இல்லாமல்) இக்கட்டணத்தினை செலுத்தவேண்டும்.

அலுவலர்களும், தங்களது எனவே. அனைத்து முதன்மைக் கல்வி ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் அனைவரும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணியினை 27.11.2025-க்குள் நிறைவு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD DGE - SSLC NR 2026 - Date Extension PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.