தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு – அக்டோபர், 2025 தேர்வு முடிவுகள் Direct Link - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 18, 2025

தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு – அக்டோபர், 2025 தேர்வு முடிவுகள் Direct Link



தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு – அக்டோபர், 2025 தேர்வு முடிவுகள் வெளியீடு. Tamil Language Literary Proficiency Test – October, 2025 Exam Results Released.

பள்ளி மாணவ , மாணவியர்கள் அறிவியல் , கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்ற தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் " தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு " நடத்தப்பட்டு வருகிறது . 2025-2026 - ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11 : 10.2025 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ .1500 / -வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் . இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள் . தமிழ்நாடு அரசின் 10 - ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்பட்டது . இத்தேர்வினை 2.57,761 மாணவர்கள் எழுதியுள்ளனர் தற்பொழுது இத்தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்களின் பெயர் , முகப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி மற்றும் பள்ளியின் நிர்வாக ( அரசுப் பள்ளி அரசு உதவிப்பெறும் பள்ளி தனியார் பள்ளி ) வகையில் திருத்தங்கள் இருப்பின் 20.11.2025 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக dgedsection@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாகவும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு – அக்டோபர், 2025 தேர்வு முடிவுகள் 2025 மதிப்பெண்களை பார்க்க

👇👇👇👇

CLICK HERE TO Results

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.