Government school students stage sudden protest demanding cancellation of case and suspension against teachers - ஆசிரியர்கள் மீதான வழக்கு, சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி புதூர் அரசு பள்ளி மாணவிகள் திடீர் மறியல்
அரசு மேல்நிலைப்பள்ளியில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியருக்கு ஆதரவாக மாணவிகள் சாலை மறியல்
எட்டயபுரம் நவ.21-விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி யில் இருந்து கடந்த 3- தேதி பிளஸ்-2 வேளாண்மை பிரிவு மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப் பட்டது.
அப்போது பள்ளியில் பணிபுரியும் இயற்பியல் ஆசிரியா ஹென்றி தியாகராஜன் (வயது 41) மாணவி ஒருவருக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதேபோல், அவரால் பாதிக்கப்பட்டதாக கூறி மேலும் சில மாணவிகள் சேர்ந்து வகுப்பு ஆசிரியை மூலம் தலைமை ஆசிரியர் ஷிபா பிளவர் லைட் (S1) என்பவரிடம் புகார் தெரி வித்தபோது, அவர் அலட்சியமாக பதில் அளித்தாராம். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார், ஆசி ரியர் ஹென்றி தியாகராஜன், தலைமை ஆசிரியர் ஷிபா பிளவர் லைட் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். தலைமறை வான ஆசிரியர் ஹென்றி தியாகராஜனை பிடிக்க 2 தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேற்று காணவ அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் திடீரென பன் ளிக்கு வெளியே வந்து சாலையில் அமர்த்து போராட்டம் அவர்கள் ஆசிரியர்கள் மீது பதியப்பட்டவழக்குகள்,பணி யிடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர் இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் வெளியே வந்து மாணவிகளுக்கு அறிவுரை கூறி வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றார். அதனை தொடர்ந்து பள்ளியின் வெளிக்கதவுகள் பூட்டப்பட்டன. இதையறிந்த போலீசார் அங்கு வந்து பாது காப்பு ஈடுபட்டனர் மாணவிகள் திடீர் போராட்டம் நடத் தியது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.