TNPSC குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 21, 2025

TNPSC குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.



குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு. Hall ticket release for Group 1, 1A mains examination.

டிச.1 முதல் 4 மற்றும் டிச.8 முதல் 10 வரை சென்னை மையங்களில் மட்டும் தேர்வு நடைபெற உள்ளது.

www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC - 01.12.2025 முதல் 04.12.2025 மற்றும் 08.12.2025 முதல் 10.12.2025 முற்பகல்வரைநடைபெறவிருக்கும்ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I(தொகுதி-Iபணிகள்)மற்றும்ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IA (தொகுதி-IA பணி) - முதன்மை எழுத்துத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பான செய்தி வெளியீடு.



தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண்: 159/2025

: 05.11.2025

செய்திக்குறிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்கள்: 04/2025, நாள் 01.04.2025 மற்றும் 05/2025, நாள் 01.04.2025 வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-| (தொகுதி-| பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IA (தொகுதி-IA பணி) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 15.06.2025 முற்பகல் நடைபெற்றது. இத்தேர்விற்கான முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) முறையே 01.12.2025 முதல் 04.12.2025 மற்றும் 08.12.2025 முதல் 10.12.2025 வரை முற்பகல் சென்னை மையங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

அ. சண்முக சுந்தரம். இ.ஆ.ப.

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.