All CEOs Meeting - பிரதி மாதம் 05-ம் தேதி நடைபெறும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 21, 2025

All CEOs Meeting - பிரதி மாதம் 05-ம் தேதி நடைபெறும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

All CEOs Meeting - பிரதி மாதம் 05-ம் தேதி நடைபெறும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் பிரதி மாதம் 05-ம் தேதி நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Actions of the Director of School Education regarding the holding of a review meeting for Primary Education Officers on the 5th of each month

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6

ந.க.எண்.064422/பிடி1/இ2/2025. .20.11.2025

பொருள்

: பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் (Academic) ஆய்வுக்கூட்டம் பிரதி மாதம் 05-ம் தேதி நடைபெறுதல் தொடர்பாக

பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் தலைமையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் (Academic) குறித்த ஆய்வுக்கூட்டம் பிரதி மாதமும் 05-ம் தேதி (05-ம் தேதி அரசு விடுமுறை எனில் அடுத்த பணிநாள்) நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட கூட்டத்திற்கான கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் ஒவ்வொரு மாதமும் நான்காவது வார இறுதியில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். மேற்கண்ட கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களை பிரதி மாதமும் 01-ம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு (pdisec.dse@gmail.com) அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும். மேற்கண்ட கூட்டப் பொருளின் அடிப்படையில் கல்விசார் (Academic) செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர்-2025ம் மாதத்திற்கான கல்விசார் (Academic) ஆய்வு கூட்டம் 05.12.2025 அன்று காணொலி வாயிலாக நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்திற்கான கூட்டப் பொருள் சார்ந்த விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

மேற்கண்ட கூட்டப் பொருள் விவரங்களை 01.12.2025-5 இவ்வியக்ககத்திற்கு (pdisec.dse@gmail.com) அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஏதுவாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது மாவட்ட கல்விசார் (Academic) செயல்பாடுகள் குறித்த விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.



இணைப்பு :

கூட்டப் பொருள் படிவம் 1 முதல் 18.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.