TET - சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நிலைமை - ஒரு பார்வை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 29, 2025

TET - சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நிலைமை - ஒரு பார்வை

TET - சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நிலைமை - ஒரு பார்வை TET - Minority School Teachers Situation - A Glance


TET - சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நிலைமை - ஒரு பார்வை

சிறுபான்மை பள்ளிகளுக்கு , கட்டாயக் கல்வி சட்டம் பொருந்தாது என 2014ல் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பரமத்தி எஜுகேசனல் சொசைட்டி தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பை வலியுறுத்தி இதை தெளிவுபடுத்தியுள்ளது. எனவே கட்டாயக் கல்விச் சட்டத்தின் ஒரு பிரிவாக உள்ள தகுதித் தேர்வும் சிறுபான்மை பள்ளிகளுக்கும் தேவையற்றதாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து 02.06.2023-ல், சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய மிக நீண்ட ,விரிவான தீர்ப்பில் பக்கம் 128 - ல் para 71 -ல் உச்சநீதி மன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு தகுதித் தேர்வு பொருந்தாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்துத்தான் உச்சநீதிமன்றத்தில் இவ்வளவு காலமாக வழக்கு நடைபெற்று வந்தது. அதில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுபெற தகுதித் தேர்வு தேவையில்லை என்றும், ஆனால் சிறுபான்மை பள்ளிகளில் நியமனம் பெற தகுதித் தேர்வு கட்டாயம் என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டில் சிறுபான்மை பள்ளிகளுக்கு TET தேர்ச்சி தேவை என்ற மேல் முறையீட்டை 19.02.2025 தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் கடந்த 01.09.2025 அன்று உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் ,ஆசிரியப் பணியில் 55 வயதைத் தாண்டியவர்கள் தவிர மற்ற அனைவரும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் சிறுபான்மைப் பள்ளிகளைப் பொறுத்தவரை , ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின்மீது , 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு ஏதும் வழங்க வாய்ப்பு இல்லாததால், அதன் மீது தீர்ப்பு ஏதும் வழங்காமல் , சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு, ஏற்கனவே 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியே முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதன் மீது உச்சநீதிமன்ற நீதிபதி எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வேறு வழக்கும் பதிவு செய்யப்படவும் இல்லை.

எனவே தற்போது சிறுபான்மைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அறிவிப்போ அல்லது எவ்வித வழக்கோ நிலுவையில் இல்லை.

ஆகவே, 01.09.2025 அன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, சிறுபான்மைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.