SI போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! Applications for SI competitive exam training courses have been announced.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனில் போட்டிதேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பொருள் தொடர்பில், TNUSRB SI போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளானது திங்கள் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகின்றது பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் நடைபெறுகிறது. எனவே, TNUSRB SI போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் டாக்டர்.சி.பழனி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கீழ்கண்ட முகவரியில் நேரில் அணுகவும்;
அலுவலக முகவரி:
மாநில தொழில்நெறி வழிகாட்டும்மையம்,
A-28, முதல் தளம்,
டான்சி கட்டிடம்,
திரு.வி.க. தொழிற்பேட்டை,
கிண்டி,
சென்னை-32.
தொலைபேசி எண்: 044-22500134, 9361566648
முதன்மை செயல் அலுவலர்/இயக்குநர்
மாநில தொழில்நெறி வழிகாட்டும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொடர்பு கொள்ளலாம்.
CLICK HERE TO DOWNLOAD SI போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.