பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு - CEO அறிவுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 14, 2025

பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு - CEO அறிவுறுத்தல்

பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு - CEO அறிவுறுத்தல்

தஞ்சையில்குளத்தில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலியாகி உள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மாணவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் மகன் மாதவன் (10), அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மகன் பாலமுருகன் (10), ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த் (8) ஆகிய மூன்று பேரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லாமல் மருதகுடி ஊரணி குளத்தில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுதொடர்பான விசாரணையில், தஞ்சை மாவட்டத்தின் திருவேங்கட உடையான்பட்டியின் கீழத்தெருவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மாலை வீடு திரும்பவில்லை. அதன்படி, 8ம் வகுப்பு மாணவர் ஜஸ்வந்த் , 5ம் வகுப்பு மாணவர்கள் பாலமுருகன் மற்றும் மாதவன் ஆகியோர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், எனவே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அவர்கள் குறித்து தகவல் எதும் கிடைக்காத நிலையில், அருகே உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் கிராமத்தினருடன் சேர்ந்து போலீசாரும் மாணவர்களை தேடியுள்ளனர். அப்போதுதான் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள குளத்தின் அருகே மாணவர்களின் புத்தக பை மற்றும் அவர்கள் அணிந்திருந்த உடைகளும் கிடந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார், அந்த பகுதி மக்கள் உதவியுடன் குளத்தில் தேடினர். அப்போது மாணவர்கள் 3 பேரும் குளத்தில் மூழ்கி இறந்திருந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல்கள் இறந்த நீலையில் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். திருவாரூரிலும் இதே போன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடி பகுதியில் ஓடும் ஆற்றில் முதியவர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் அவரை தேடினர். ஆனால் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இனி வரும் நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்பதால், குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தஞ்சையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், மருதக்குடி கிராமம், திருவேங்கடஉடையான்பட்டியைச் சேர்ந்த சிறுவர்கள் செல்வன். ஜஸ்வந்த் (8), செல்வன். மாதவன் (10) மற்றும் செல்வன், பாலமுருகன் (10) ஆகிய மூவரும் நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மருதக்குடி கிராமத்தில் உள்ள ஊரணிகுளம் என்கிற பிள்ளையார் குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இச்சம்பவத்தில், உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது பெற்றோர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுறுத்தல்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திருவேங்கட உடையான்பட்டி தஞ்சாவூர் ஒன்றியம் பள்ளி மாணவர்கள் நீரில் முழ்கி இறந்த சோக நிகழ்வு

பள்ளி தலைமை ஆசிரியர்கள் தம் பள்ளி மாணவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கும்படியும், ஆறு மற்றும் குளங்களில் இறங்கவேண்டாம் என அறிவுறுத்தும்படியும் வேண்டுகோள்.

- முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள், தஞ்சாவூர்.

1 comment:

  1. Nashville is quickly becoming known for its comprehensive detox services. Whether it's drug or alcohol detox, the local providers are offering evidence-based treatments that cater to individual needs. Definitely worth exploring if you or a loved one need help. detox nashville

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.