63 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரிவுரையாளர்களாக பதவி உயர்வு
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், விரிவுரையாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு சீனியரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. முதற்கட்டமாக தகுதி வாய்ந்த பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, விரிவுரையாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழில் 8 பேரும், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, தெலுங்கு, மலையாளம், அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல் பாடப்பிரிவில் தலா ஒருவரும், கணிதத்தில் 10 பேரும், இயற்பியலில் 5 பேரும், வேதியியலில் 13 பேரும், விலங்கியலில் 6 பேரும், வணிகவியலில் 4 பேரும், பொருளியலில் 4 பேரும் என மொத்தம் 63 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், விரிவுரையாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.