"பேராசிரியர் அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளை தெரிவு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு - "பேராசிரியர் அன்பழகன் விருது" - சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் அறிவிப்பு "பேராசிரியர் அன்பழகன் விருது"- சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் பெயரில் விருதுகள் வழங்குதல் தகுதியான பள்ளிகளை தெரிவு செய்து அனுப்பக்கோருதல் - தொடர்பாக. -
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அவர்களின் செய்தி வெளியீடு எண் 2156, நாள் 30.11.2022.
பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க. எண் 15429/எம்/இ2/2023 நாள் 14.11.2024
அரசாணை (நிலை) எண் 34 பள்ளிக் கல்வி (ப.க. 5(1)) துறை நாள் 12.02.2025 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 30.11.2022 நாளிட்ட அறிவிப்பின்படி "கற்றல்-கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வை(3)ல் காணும் அரசாணையில் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதிற்கு தகுதியான பள்ளியினை தெரிவு செய்து விருது வழங்குதல் சார்ந்து பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பொதுத் தேர்வுகள் / திறனறித் தேர்வுகளில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு, அன்றாட கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகள், வகுப்பறை கற்பித்தலில் தொழில்நுட்ப பயன்பாடு, கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் கல்விசாரா செயல்பாடுகள் மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை, விளையாட்டுப் போட்டிகள், கலைத்திருவிழா, மன்ற செயல்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு ஆகியனவற்றின் அடிப்படையிலும், பள்ளி வகுப்பறைகள் மாணவர்களின் கற்றலுக்கு ஏற்ற வகையில் இருக்கை வசதி மற்றும் தேவையான மின் மற்றும் மின்னணு சாதனங்களுடன் கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானம் மற்றும் அவற்றின் பயன்பாடு போதுமான எண்ணிக்கையிலான கழிப்பறைகள் மற்றும் அவற்றின் முறையான பராமரிப்பு, பள்ளிவளாக தூய்மை, மாணவர்கள் உணவருந்த சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை, பள்ளியின் பசுமைச் சூழல், பள்ளி காய்கறித் தோட்டம் மற்றும் அதன் பயன்பாடு நூலக பயன்பாடு ஆய்வக பயன்பாடு ஆகியவற்றையும் மதிப்பிட்டு விருதுக்குரிய பள்ளியை தெரிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கான குழு அமைத்தல் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியர் அன்பழகன் விருதுக்கான பரிந்துரைகளை வழங்கிட ஏதுவாக மாவட்ட / மாநில அளவில் பின்வரும் தேர்வு குழுவினை கீழ்கண்டவாறு அமைத்திட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாவட்டத் தேர்வு குழு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அளவீட்டின் முறையின் அடிப்படையில் விருதுக்கு தகுதியான பள்ளிகளை 1:2 என்ற விகிதத்தில் தெரிவு செய்து மாநில மாவட்ட தேர்வு குழுவிற்கு பரிந்துரைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்வு குழு மற்றும் மாவட்ட தேர்வுக் குழுவின் பரிந்துரை பள்ளிகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் அடிப்படையில் பேராசிரியர் அன்பழகன் விருதுக்குரிய பள்ளிகளை மாவட்ட வாரியாக தெரிவு செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்வுக்குழு அரசு தொடக்க அல்லது நடுநிலைப் பள்ளிகளில் ஏதேனும் இரண்டு மற்றும் அரசு உயர்நிலை அல்லது மேல்நிலை பள்ளிகளில் ஏதேனும் இரண்டு என மொத்தம் ஒரு மாவட்டத்திற்கு தகுதியான 4 பள்ளிகளை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டு படிவத்தின் விவரப்படி தேர்வு செய்து கருத்துருக்களை 27.02.2025 க்குள் அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், சுற்றுச் சூழல் மன்ற செயல்பாடுகள் பள்ளி நூலகப் பயன்பாடு (நூலக அமைப்பு, மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்படுதல், அன்றாட மதிப்பெண்கள் நூலக பயன்பாடு. மாணவர்கள் நூலக பயன்பாடு சார்ந்த செயல்பாடுகள் ஆகியனவற்றை ஒருங்கே மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்க வேண்டும். பள்ளி ஆய்வக பயன்பாடு கற்றல் - கற்பித்தல் நிகழ்வில் ஆய்வக உபகரணங்களின் பயன்பாடு. பள்ளி ஆய்வகம் மூலம் மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் / செயல்திட்டங்கள் அறிவியல் புத்தாக்க விருது போன்றவற்றில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பில் ஆய்வக பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கே மதிப்பீடு செய்தல்
பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் கற்பித்தல் செயல்பாடுகள் - பள்ளிப் பார்வை செயலியில் இடம் பெற்றுள்ள கற்பித்தல் உற்றுநோக்கல், வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 10 மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு செய்து அனைத்து ஆசிரியர்களுக்குமான ஓட்டு மொத்த மதிப்பீட்டினை 50 மதிப்பெண்களுக்கு மாற்றிக்கொள்ளவும்.
கடந்த மூன்று ஆண்டுகள் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட பயிற்சிகளின் மூலம் மேம்பட்ட வகுப்பறை சூழல் மற்றும் பயன்பாடு கலைத் திருவிழா உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் வட்டார, மாவட்ட, மாநில அளவிலான பங்கேற்பு மற்றும் வெற்றிகள் பள்ளி அலுவலக மேலாண்மை (EMIS தரவுகள், மின்னணு பதிவேடுகள் பராமரிப்பு, மாணவர்கள் நலன் சார்ந்த இணைய வழி சேவைகள், - PSTM சான்றிதழ் வழங்குதல் போன்றவை) மற்றும் நான் முதல்வன் திட்ட செயல்பாடுகள்
மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்படுதல், அன்றாட மதிப்பெண்கள் நூலக பயன்பாடு, மாணவர்கள் நூலக பயன்பாடு சார்ந்த செயல்பாடுகள் ஆகியனவற்றை ஒருங்கே மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்க வேண்டும். பள்ளி ஆய்வக பயன்பாடு கற்றல் - கற்பித்தல் நிகழ்வில் ஆய்வக உபகரணங்களின் பயன்பாடு, பள்ளி ஆய்வகம் மூலம் மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் / செயல்திட்டங்கள் அறிவியல் புத்தாக்க விருது போன்றவற்றில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பில் ஆய்வக பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கே மதிப்பீடு செய்தல்
பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் கற்பித்தல் செயல்பாடுகள் - பள்ளிப் பார்வை
செயலியில் இடம் பெற்றுள்ள கற்பித்தல் உற்றுநோக்கல், வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 10 மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு செய்து அனைத்து ஆசிரியர்களுக்குமான ஓட்டு மொத்த மதிப்பீட்டினை '50 மதிப்பெண்களுக்கு மாற்றிக்கொள்ளவும்.
கடந்த மூன்று ஆண்டுகள் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட பயிற்சிகளின் மூலம் மேம்பட்ட வகுப்பறை சூழல் மற்றும் பயன்பாடு கலைத் திருவிழா உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் வட்டார, மாவட்ட, மாநில அளவிலான பங்கேற்பு மற்றும் வெற்றிகள் பள்ளி அலுவலக மேலாண்மை (EMIS தரவுகள், மின்னணு பதிவேடுகள் பராமரிப்பு, மாணவர்கள் நலன் சார்ந்த இணைய வழி சேவைகள் - PSTM சான்றிதழ் வழங்குதல் போன்றவை) மற்றும் நான் முதல்வன் திட்ட செயல்பாடுகள்
CLICK HERE TO DOWNLOAD anbazhagan viruthu - DSE Proceedings - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.