"அப்பா”.. APPA எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்! என்ன அது? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 22, 2025

"அப்பா”.. APPA எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்! என்ன அது?



"அப்பா”.. APPA எனும் பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்! என்ன அது?

APPA' (அப்பா) செயலியை இன்று அறிமுகம் செய்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அனைத்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்புக்கு "APPA" என்ற பெயரில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கடலூரில் நடைபெற்று வரும் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' விழாவில், 'அப்பா' என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஆய்வுக்காக கடலூர் மாவட்டத்துக்குச் சென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். நேற்று கடலூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிலையில், இன்று கடலூரில், நடைபெற்று வரும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார். தமிழ்நாடு மாநிலப் பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் 7வது மண்டல மாநாடாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு இன்று சற்று தாமதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். வந்ததும், பெற்றோர்கள், ஆசிரியர்களை வணங்குகிறேன் என்று வணக்கம் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தான் வரும் வழிகளில் எல்லாம் மக்களை சந்தித்தேன். எனவேதான் தாமதமாகிவிட்டது என்று, விழாவில் பங்கேற்றவர்களிடம், விழாவுக்கு தாமதமாக வந்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பேசுகையில், அம்மா, அப்பா, ஆசிரியரை தெய்வம் என்று கூறுவர். கல்வித் துறையில் உலகத் தர சாதனைகள் படைக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு செய்வது அனைத்துமே சாதனைதான். ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டின் சொத்து என்ற நினைப்போடு அவர்களை வளர்க்கிறோம் என்று ஸ்டாலின் கூறினார்.

இந்த விழாவில், பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் செயலியான அப்பா (APPA) என்ற பெயரில் செயலியை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அப்பா என்ற செயலி எப்படி செயல்படும் என்ற காணொலியும் இந்த விழாவில் திரையிடப்பட்டது.

உங்களில் ஒருவன் நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோ அண்மையில் வெளியானது. அதில் பேசுகையில், "கட்சிக்காரர்கள் இயக்கத்துக்கு தலைவர் என்பதால் என்னை தலைவர் என்று சொல்கிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதனால் முதல்வர் என்று அழைக்கிறார்கள். இப்போது இருக்கின்ற இளைய தலைமுறையினர் என்னை அப்பா என்று அழைக்கும் போது ரொம்ப ஆனந்தமாக இருக்கிறது. அப்பா என்ற உறவு எப்போதும் மாறாது. இந்த உறவு என்னுடைய பொறுப்புகளை கூட்டியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இன்னும் நான் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது" எனக் கூறி இருந்தார்.

APPA - Anaithu Palli Parents teachers Association செயலியை முதலமைச்சர் வெளியிட்டார்

APPA - Anaithu Palli Parents teachers Association App

கடலூர் : விருத்தாச்சலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடக்கும் ‘ பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் பங்கேற்று , பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் APPA என்ற செயலியை தொடங்கிவைத்து , விழா மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் , எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் , சி.வி.கணேசன் பங்கேற்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.